வணக்கம்!
ஒருவருக்கு ஆறில் ஒரு கிரகம் அமர்ந்து அந்த தசா நடந்தால் பொதுவாக நாம் நன்றாக இருக்காது என்று அடித்துவிடகூடாது. ஆறில் இருந்து ஒரு கிரகம் தசா நடைபெற்றால் அது நன்றாகவும் இருக்கின்றது என்பதை பலரின் ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன்.
பொதுவாக ஒரு தசா நடந்தால் முதலில் கவனிக்கவேண்டியது. அந்த கிரகத்தை லக்கினமாக வைத்து பலனை சொன்னால் நன்றாக இருக்கும். கிரகம் அமர்ந்திருக்கும் வீடு முதல் வீடாக எடுத்துக்கொண்டு அதன் உட்பிரிவுகளை கணித்து சொன்னால் அது பலன் தருவதை சரியாக சொல்லலாம்.
ஒரு ராசிக்கு நடைபெறும் தசா நாதன் பகையாக இருக்கின்றதா அல்லது நட்பாக இருக்கின்றதா என்பதையும் பார்க்கவேண்டும். இதுவும் ஒரு விதத்தில் நன்றாக வேலை செய்கிறது. பகையாக இருந்தால் பலன் கொடுக்கும்பொழுது கொஞ்சம் சுணக்கம் ஏற்படும்.
ஆறில் அமர்ந்த கிரகம் எந்த வீட்டிற்க்கு எல்லாம் அதிகாரம் படைத்திருக்கிறார் என்பதை பொறுத்தும் பலன் தரும். ஆறில் அமர்ந்த கிரகம் நல்ல பலனை கொடுக்ககூடிய வீட்டிற்க்கு சொந்தகாரர்களாக இருந்தால் நல்ல பலனை நாம் எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொருவரின் சொந்த ஜாதகத்தை பொறுத்து அவர் அவர்களுக்கும் பலனை தீர்மானிக்கமுடியும். ஆறில் இருந்து தசா நடைபெற்றவர்கள் பலர் நன்றாக இருக்கின்றனர். நிறைய அனுபவத்தில் இதனை நான் பார்த்து இருக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment