Followers

Sunday, September 24, 2017

ஜாதகம் சாதகமாக


ணக்கம்!
          இந்தியாவில் உள்ளவர்கள் இருந்தாலும் சரி வெளிநாட்டில் உள்ளவர்களாக இருந்தாலும் திருமணம் என்பதை எப்படியாவது நடத்திவிடுவார்கள்.  தனக்கு என்று ஒரு துணையை தேர்ந்தெடுத்துவிடுவார்கள். 

திருமணம் அனைவருக்கும் நடைபெறுகிறது என்றால் அனைவர்களின் ஜாதகத்திலும் திருமண வீடு நன்றாக இருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இருக்காது. சொல்லப்போனால் அதுவும் நன்றாக கெட்டுதான் இருக்கும்.

ஒவ்வொரு வீடு எப்படி பாழ்படுகிறதாே அதனைப்போல் திருமணத்தை தரும் ஏழாவது வீடும் கெட்டுவிடுவதும் உண்டு ஆனால் நம்ம மக்கள் அனைத்து கோவிலையும் தரிசனம் செய்தாவது அதனை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். தனக்கு அவசியம் என்று தேவைப்பட்டால் அதனை போராடி பெறுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசயத்திலும் நாம் ஜாதகத்தை பார்த்துக்கொண்டு நமக்கு தேவையானதை போராடி பெறமுடியும். கோவிலுக்கு செல்லுவது அல்லது பரிகாரம் செய்வது அதற்கு முயற்சி எடுத்தால் கண்டிப்பாக அதனை கிரகங்கள் கொடுக்கும்.

மரணத்தை கூட இப்படி பெறமுடியும் ஆனால் அதனை யாரும் கேட்பதில்லை. கேட்டால் கண்டிப்பாக கிரகங்கள் கொடுக்கும் என்பது தான் கிரகங்களுக்கு உள்ள தனிப்பட்ட அந்தஸ்து. நாம் விரும்பியதை நாம் பெறமுடியும் என்று சொல்லுகிறேன்.

உங்களின் ஜாதகத்தில் நல்லதை எப்படி பெறலாம் என்பதை ஜாதகத்தை நன்றாக கவனித்து அதனை பெறலாம் என்பது தான் உங்களுக்கு சொல்லும் கருத்து. போராட்டம் அதிகமாக நாம் செய்தால் கண்டிப்பாக அது கிடைத்தே தீரும் என்பது தான் இவ்வளவு காலங்கள் நான் கண்ட உண்மை. நமக்கு இது எல்லாம் கிடைக்காது என்று எதனையும் செய்யாமல் இருக்காதீர்கள். எப்படியாவது அது கிடைக்கும் என்று முயற்சி செய்தால் கிடைக்கும். ஜாதகத்தின் வழியில் சாதகமாக வாழ்க்கையை மாற்றலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: