வணக்கம்!
இன்றைய காலத்தில் அதிகப்பட்சம் பேர் வாடகை வீட்டில் தான் வசித்துக்கொண்டு இருக்கின்றார்கள். வாடகை வீடு எந்தளவுக்கு நன்றாக இருக்கும் என்று சொல்லமுடியாது. அதாவது அந்த வீட்டின் வாஸ்து மற்றும் வீட்டின் உள்ள சக்தியின் அளவு எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரியாது.
அனைத்தையும் நாம் பார்த்துக்கொண்டு வாடகை வீட்டையும் பிடிக்கவும் முடியாது. ஏதாவது ஒரு குறை இருக்க தான் செய்யும். அந்த வீட்டில் நாம் வசித்தால் நமக்கும் ஏதாவது ஒரு குறை இருந்துக்கொண்டு தான் இருக்கும்.
வாஸ்து என்பதை மட்டும் சொல்லவில்லை அந்த வீட்டில் நிலவும் நல்ல சக்தியும் நான் சொல்லுகிறேன். ஒரு குறை இருந்தாலும் நமக்கு பிரச்சினை என்பது வந்துவிடுகிறது. குறைந்தபட்சம் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படும்.
ஒரு சிலருக்கு செலவு அதிகமாக வந்துக்கொண்டே இருக்கும் அல்லது மனம் நிம்மதி இருக்காது. வீட்டில் இரவில் ஒழுங்காக தூக்கம் கூட இருக்காது. கனவு தொல்லை இருந்துக்கொண்டு இருக்கும்.
வாடகை வீட்டில் நாம் எதுவும் செய்யமுடியாவிட்டாலும் ஒன்றை மட்டும் செய்யலாம். அதாவது வீட்டில் இரண்டு நேரமும் உங்களின் வீட்டில் நன்றாக பூஜை செய்தால் இதனை சரிசெய்யமுடியும். நீங்களே உங்களின் வீட்டில் நன்றாக பூஜை செய்து சாம்பிராணி தூபம் போடுங்கள். இது அனைத்தையும் சரி செய்துவிடும். இரண்டு வேளையிலும் நல்ல நேரம் எடுத்துக்கொண்டு இதனை செய்யவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment