வணக்கம்!
நம் விவசாயிகள் சோதிடத்தை கணித்து அதற்கு தகுந்தார்போல் விவசாயம் செய்வார்கள். அது தொன்றுதொட்டு வந்த பழக்கம். இதனை இன்றும் கடைபிடித்து வருகின்றனர். ஒரு சிலர் தொடர்ச்சியாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டால் அதனை தாக்குபிடிக்க முடியாது என்று எண்ணி சோதிடத்தை பார்த்து அதற்கு தகுந்தார் போல் விவசாயம் செய்வார்கள்.
தற்பொழுது விதைகளை இடும் பருவம். தண்ணீர் வரவில்லை என்றாலும் போர் தண்ணீர் வைத்து விவசாயம் செய்பவர்கள் நெல்விதை இடும் பருவம். நெல் ஊறவைத்து அதனை நாற்றங்காலில் விதைப்பார்கள்.
நெல் ஊறவைக்கும்பொழுது அதனை ஞாயிற்றுகிழமையாக பார்த்து செய்வார்கள். நெல் ஊற வைத்து அதனை விதைப்பது செவ்வாய்கிழமையாக இருக்கும். நெல் ஊறவைக்கும்பொழுது சனி குறிக்கீட கூடாது என்பார்கள். சனிக்கிழமை இடையில் வரக்கூடாது என்பார்கள்.
நம்ம ஆளுங்க சனிக்கிரகம் விவசாயத்திறக்கு உரியது என்று சோதிடர்கள் சொல்லுவார்கள். உண்மையில் சனிக்கிரகம் விவசாயத்திற்க்கு கிடையாது. அனுபவத்தில் சனிக்கிழமையை விவசாயத்திற்க்கு என்று எதற்க்கும் நாங்கள் தேர்ந்தெடுப்பதில்லை.
நெல்லை அவியல் செய்து அதனை அரிசியாக மாற்றுவதற்க்கு நெல்அவியல் செய்வோம். இதனை நாங்கள் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையை தவிர்த்துவிடுவது உண்டு. ஏன் என்றால் உலகத்திற்க்கு நெல் படைக்கப்பட்ட நாள் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை என்பதால் இதனை தவிர்ப்பது உண்டு.
சோதிடம் தெரியுதோ இல்லையோ அனுபவத்தில் இதனை பின்பற்றி வருபவர்கள் உண்டு. தஞ்சாவூர் பகுதி முழுவதும் இது பயன்பாட்டில் தற்பொழுதும் உண்டு. வெளிமாவட்டத்தில் எப்படி என்பது எனக்கு தெரியவில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment