வணக்கம்!
நம்முடைய நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். சுக்கிரனின் தசாவுக்கு பரிகாரம் செய்து தான் பலனை அனுபவிக்க வேண்டுமா என்று கேட்டார்.
பரிகாரம் செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவர் அவர்களின் விருப்பம். சுக்கிர தசா வருகின்றது சுக்கிரன் சுமாரான பலனை கொடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இருப்பதற்க்கு ஒரு வீடு செலவுக்கு பணத்தை மட்டும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது.
இது போதும் என்று நினைத்தால் அப்படியே விட்டுவிடலாம். இல்லை நிறைய வீடு வேண்டும். நிறைய பணம் வேண்டும் பல வசதி வாய்ப்புகளை தற்பொழுதே செய்து முடித்துவிடவேண்டும். இதிலேயே என்னுடைய மூன்று தலைமுறைக்கும் சொத்து சேர்த்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக சுக்கிரனை தன் வழிக்கு கொண்டுவர பூஜை பரிகாரங்களில் ஈடுபட்டு தான் ஆகவேண்டும்.
சுக்கிரன் முக்கால்வாசி பேருக்கு சும்மா ஒரு சொகுசு வாழ்க்கையை அதுவும் கொஞ்சநாள்கள் கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது அதன் பிறகு நோயை கொடுக்கிறது அதனால் தான் சுக்கிரனுக்கு பூஜை செய்யவேண்டும் என்று சொல்லுகிறேன்.
உங்களின் வீட்டிற்க்கு வந்த சுக்கிரனை இராஜாபோல அலங்கரித்து பார்த்துக்கொண்டால் உங்களுக்கு சுக்கிரன் வாரி வழங்குவான்.வந்த ஆளை கண்டுக்கொள்ளவில்லை என்றால் அவர் வந்தற்க்கு ஏதோ ஒன்றை மட்டும் செய்துவிட்டு சென்றுவிடுவார்.
உங்களுக்கு எந்த தசா நடந்தாலும் சரி அந்த தசாவின் முழுபலனையும் நீங்கள் பெறவேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் தசாநாதனை குளிர்க்கவேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. அதன்பிறகு உங்களின் விருப்பம் போல் செயல்பட்டுக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment