வணக்கம்!
ஜாதகத்தில் ஒவ்வொரு வீடும் வேலை செய்யும் இதில் தீமைகளை அதிகம் கொடுக்கின்ற வீட்டை பார்த்து நாம் பயப்படுவோம். தீமைகளை அதிகமாக கொடுப்பது எந்த வீடாகவும் இருக்கலாம். எது அதிகம் கொடுக்கின்றது என்பதை அறிந்து அதற்கு தகுந்தார்போல் பரிகாரம் அல்லது ஏதோ ஒன்று செய்து அதில் இருந்து விடுபடவேண்டும்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் நோய் வராமல் இறப்பவன் என்பது கோடியில் ஒருத்தராக இருக்கலாம் அவருக்கும் வெளியில் தெரியாமல் ஏதாவது ஒரு நோய் இருக்ககூடும். சோதிடத்தை படிப்பவர்களுக்கு தான் தெரியும் இத்தனை பிரச்சினையை கொடுத்து இதில் ஒருவன் வாழ்கிறானே அதுவே பெரிய விஷயம் என்று புரியும்.
ஒவ்வொரு வீடும் நம்மை அடிப்பதற்க்கு தயாராகவே இருந்துக்கொண்டு இருக்கின்றது என்பது சோதிடம் படிப்பவர்களுக்கு தெரியும். இதில் ஆறாவது வீடு கொடுக்கும் நோயும் நம்மை தாக்கிக்கொண்டு தான் இருக்கின்றது.
நோய் வருகின்றது என்றால் முதலில் அதனை வராமல் தடுக்க வழி செய்யவேண்டும் வந்துவிட்டது என்றால் அதற்கு தகுந்த மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் வந்தபிறகு அதனை தீர்க்காமல் நாம் வைத்திருந்தால் நாம் செய்கின்ற தொழில் அல்லது வேலையில் அதன் பாதிப்பு தெரியும்.
நோயோடு நாம் செயல்பட்டால் அந்த நோயின் தன்மை நம்முடைய தொழிலிலும் காட்டும். உங்களுக்கு இருக்கும் நோயை தீர்த்துக்கொண்டு உங்களின் வேலையில் அல்லது தொழிலில் கவனம் செலுத்தினால் அது வெற்றியை நோக்கி செல்லும்.
ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்.
ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment