Followers

Saturday, September 30, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          இன்றைய இளைஞர்கள் ஆட்டம் அதிகமாக போடுவார்கள். ஆட்டம் அதிகம் என்று சொல்லுவது இளைமையில் வரும் ஆட்டம் அது எதுவாக இருந்தாலும் சரி இந்த ஆட்டத்தை இளைமையில் ஒருவர் அதிகம் ஆட ஆரம்பித்தால் பிற்காலத்தில் அவர்கள் அதிக கஷ்டப்படுவார்கள்.

எவர் ஒருவர் இளமையில் அதிக பெண்களோடு தொடர்புக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு அதிகமாக பெண் குழந்தைகள் தான் பிறக்கும். அவர்களின் காலத்தில் அதிக கஷ்டத்தை அது கொடுத்துவிடும். ஒருவர் பெண்களோடு தொடர்புக்கொள்கிறார் என்றால் அவர்க்கு சுக்கிரன் அந்தளவுக்கு பிரபலமாக இருக்கின்றது என்று அர்த்தம்.

எந்தளவுக்கு பிரபலமாக சுக்கிரன் மாற்றுகிறதோ அந்தளவுக்கு பிற்காலத்தில் அவர்களை சிக்க வைக்கும் என்பது தான் உண்மையான ஒன்று. இது பெரும்பாலானவர்களுக்கு இது நடந்து இருக்கின்றது.

இளமையில் அதிக ஆட்டம் போடுவது சகஜமான ஒன்று தானே என்று யாராவது கேட்டால் அவர்களின் வாழ்க்கை நன்றாக உற்று கவனியுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் நன்றாக இருக்கமாட்டார்கள்.

இளமையில் சொகுசை கொடுத்த சுக்கிரன் பிற்காலத்தில் அது கஷ்டத்தை கொடுக்கிறது. எப்படி எல்லாம் கஷ்டத்தை கொடுக்கிறது என்றால் அவர்களின் பெண்கள் வாரிசு நன்றாக வாழாமல் சீரழிக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: