Followers

Monday, June 10, 2013

தேங்காயின் சிறப்பு


வணக்கம் நண்பர்களே!
                     அறிவியலும் ஆன்மீகமும் என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தில் தேங்காயின் சிறப்பு என்று ஒரு கட்டுரை இருந்தது. அதனை உங்களின் கண்களுக்கு தருகிறேன்.

ஆலய வழிபாட்டில் தேங்காய் பழம் வெற்றிலை பூ ஆகியவை எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம் இதில் தேங்காயை உடைத்து வழிபடுவது இந்து சமய வழிபாட்டின் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. 

தேங்காயின் உள்ள மூன்று கண்கள் மும்மலங்களை குறிக்கிறது. தேங்காயை உடைக்கும்போது பக்தன் தனது மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றையும் உடைத்து எறிகிறான் என்பதன் உட்பொருளாகும். மேலும் ஆன்மாவை மூடியிருக்கும் மும்மலங்கள் அகன்று தேங்காயின் சுவையான ஆன்மா வெளிப்படுகிறது என்பது இதன் தத்துவமாகும்.

சிதறகாய் உடைப்பது ஏன் தெரியுமா?

சிதறுதேங்காய் உடைப்பதன் மூலம் என்னுடைய அகந்தையும் ஆணவமும் ஒழிந்தன என்று கடவுளின் முன்பு பிரமாணம் செய்வதாகப் பொருள் அகங்காரம் என்ற ஏடு சுக்கல் சுக்கலாகிப் போனால் அமிர்தரசம் என்ற இளநீர் உள்ளே இருப்பதை உணரலாம்.

தேங்காயின் வடிவமும் கோளம். பிரபஞ்சத்தின் வடிவமும் கோளம் இரண்டுமே நிலையற்ற தன்மை கொண்டவை.

தேங்காயின் உள்ளே இருக்கக் கூடிய வெள்ளைப் பகுதி எவராலும் விளக்க முடியாத அந்தப் பரமாத்வைக் குறிப்படுகிறது. இளநீர் என்பது பரமாத்மா தரும் அமிர்தத்தினை ஒத்திருக்கிறது.

தேங்காயின் உள்ளே ஒளிந்திருக்கக் கூடிய மென்மையான பருப்புப் பகுதியையும் அதனுள்ளே இருக்கும் இளநீரையும் புறக்கண்களால் காணமுடியாது. அதற்கு காரணம் அந்த மாயை என்ற ஒடு தான் பரமாத்மாவை காண முடியாமல் ஜூவாத்மாவைத் தடுக்கிறது.

தேங்காய் தத்துவம் ஆலய வழிபாட்டில் சிறப்பான பொருள் தருவதாகும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: