Followers

Tuesday, June 4, 2013

மனதால் உருகி


வணக்கம் நண்பர்களே !
                    திருவண்ணாமலை சென்றபொழுது நண்பர் இளங்கோவன் அவர்கள் சொன்னார் கிரிவலம் முடித்தபிறகு வாடகைக்கு அறை எடு்த்து தங்கிவிட்டு தரிசனம் செய்த பிறகு ஊருக்கு போகிறேன் என்றார். பெளர்ணமியில் தரிசனம் செய்வது என்பது முடியாத காரியமாக தான் இருக்கும். அதனால் அவரிடம் நான் சொன்னேன். கிரிவலம் சென்றுவிட்டு கோபுரதரிசனம் செய்தால் போதும் என்றேன். உடலை வருத்தி தரிசனம் செய்வதைவிட மனதை வருத்தி தரிசனம் செய்யுங்கள் என்று சொன்னேன். 

உடலை வருத்தி செய்யும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. உடலை வருத்தி செய்யும்பொழுது நமது உடலில் உள்ள காமம் கோபம் போன்றவை இல்லாமல் போகும் என்பதால் உடலை வருத்தி செய்ய சொல்லுகின்றனர். மலை மீது கோவில் இருக்கும் ஏன் என்றால் மலையை நாம் கஷ்டப்பட்டு ஏறும்பொழுது நமது உடலில் உள்ள தேவையற்ற சக்திகள் எல்லாம் வெளியே செல்லும் கடைசியில் சாமி தரிசனம் செய்யும்பொழுது நாம் சரணாகதி அடைந்துவிடலாம். அந்த காரணத்தால் தான் மலையில் கோவிலை வைத்திருக்கிறார்கள்.

மனதை உருகி நாம் கடவுளை நினைக்கும்பொழுது கடவுள் உங்களை தேடி வருவார். அதனால் மனதை உருகி கடவுளிடம் சரணடையுங்கள். மனதால் தான் அனைத்தையும் தன் வசப்படுத்த முடியும்.ஒவ்வொருவரும் மனதை வசப்படுத்த கற்றுக்கொண்டுவிட்டால் போதுமானது. முதலில் மனதால் பிராத்தனை செய்வது கடினமான ஒன்று எதுவும் பழக பழக தான் கைவசப்படும். முதலில் உடலை வருத்தி செய்கின்ற காரியங்களை செய்த பிறகு மனதை வசப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

மனதை கவனித்தல் என்பது நல்ல செயல். மனதை கவனிக்க கவனிக்க நாம் தியானத்தில் பிரவேசிக்க ஆரம்பித்துவிடுவோம். எதற்கும் ஒரு குரு இருந்தால் மிக மிக நல்லது. குருவின் பரம்பரையில் வருபவர்களுக்கு எளிமையாக கைகூடும் ஒரு தகவலை மட்டும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். 

ஒரு நாள் குரு நாதர் வீட்டில் போய் சும்மா கண்ணை மூடி உட்காருடா என்று சொன்னார் நானும் வீட்டிற்க்கு சென்று அவர் சொன்னது போல் உட்கார்ந்து பார்த்தேன். உட்கார்ந்து ஐந்து நிமிடத்தில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. சும்மாராக மூன்று மணி நேரத்திற்க்கு பிறகு தான் எனக்கு சுயநினைவு வந்தது. அவரிடம் என்ன சாமி இது என்று கேட்டேன். இது தான்டா சமாதி நிலை என்று சொன்னார். எப்படி சாமி எனக்கு இவவளவு எளிதில் நடைபெறுகிறது என்று கேட்டேன். அதற்கு அவர் அனைத்தும் குருநாதரின் ஞானத்தின் சக்திடா என்று சொன்னார். 

நான் அவரிடம் பிராயாணாமம் செய்யாமல் எப்படி சாமி இது நடைபெறும் என்று கேட்டேன். பிராயாணமம் எல்லாம் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. ஆதியில் இது எல்லாம் கிடையாது. மனது நிற்க்கும்பொழுது சமாதிக்கு அதுவாகவே செல்லும் என்று சொன்னார். அது உண்மை தான் நான் இப்பொழுது பல நேரங்களில் இதனை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: