Followers

Friday, June 14, 2013

கோபுர தத்துவம்


வணக்கம் நண்பர்களே !
                     கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பார்கள். நானும் எனது குருவும் கோவில்களுக்கு சென்றால் நாங்கள் வெளியில் நின்று கோபுர தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுவோம். கோவிலுக்கு உள்ளே செல்வதில்லை. 

முற்காலத்தில் வாகன வசதிகள் இல்லை. மக்கள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்குச் செல்ல கோபுரங்களை அடையாளம் வைத்தே பயணம் மேற்கொண்டனர். கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க இயலாத முதியவர்கள் நோயுற்றோர் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பிராத்தனை செய்யும் இடமாக கோபுரங்களும் திகழ்கின்றன.

கோபுரத்தைப்ப பார்க்கம் ஒவ்வொரு மனிதனும் ஆத்மஞானம் பெறுகிறான். இந்த உடம்பு வெறும் கூடு இந்த உடம்பில் உறையும் மெய்ப்பொருள்தான் உண்மை. இறைவனே ஆன்ம வடிவில் நம்முள் உறைந்திருக்கிறார் என்ற ஆன்மீக உண்மையைக் கோபுரங்கள் நினைவுப்படுத்துகின்றன. மனிதனை எப்போதும் ஆன்மீக நினைவில் வைத்திருக்கவும் இறைவனை நினைவு படுத்துபவையாகவும் கோபுரங்கள் உதவுகின்றன.

கோபுரம் ஸ்தூல லிங்கம் ஆகும். கோயில் முன்பு உள்ளது ராஜகோபுரம் ஆகும். இதில் ஏராளமான மனித வடிவங்கள் இருக்கும்.விதவிதமான வாழ்க்கை முறைகள் இருக்கும். தேவர்களும் அவர்களின் செயல்முறைகளும் விளங்கப்பெற்றிருக்கும் விலங்குகளும் பறவைகளும் இடம் பெற்றிருக்கும். பிரபஞ்ச அமைப்பில் எல்லாவற்றிற்கும் இடமுண்டு என்பதைக் காட்டுவனவான இவை அமைந்திருக்கும்.

நாம் உடம்பில் மூடி மறைக்கும் பாகங்கள் வெளிபடையாக இங்குக் காட்டப்பட்டு இருக்கும் இதில் யாரும் வெட்கப்பட வேண்டியதில்லை. வாழ்க்கை முறையைத்தெரிந்து கொள்ள வேண்டிய முறைகளையே உணர்த்தியிருப்பதான ஆகமங்கள் கூறுகின்றன.

ராஜகோபுரங்களின் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை வரிசையில் அமைந்திருக்கும். மூன்று ஐந்து ஏழு ஒன்பது பதினொன்று என இருக்கும். மூன்று வாயில்கள் உள்ள இடத்தில் ஜாக்கிரதை, சொப்பன, சஷீப்தி என்று மூன்று காலங்களைக் குறிப்பிடுகின்றன. ஏழுவாயில்கள் மனம் புத்தி மற்றும் ஐம்பொறிகளை உணர்த்துகின்றன. நம்முடைய அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்குக் கோபுர வாயில்கள் சின்னங்களாக அமைந்திருக்கின்றன. புற உலகின் மனதை விடுவித்து அகத்தினுள்ளே பிரவேசிக்கும் தத்துவத்தை ராஜகோபுர பிரவேசம் நமக்கு உணர்த்திவருகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

pugazh said...

good explanation.