Followers

Tuesday, June 4, 2013

யோகம்


வணக்கம் நண்பர்களே!
                    பொதுவாக சோதிடர்களிடம் கேட்கும் கேள்வி எனது ஜாதகத்தில் ஏதாவது யோகம் இருக்கிறதா இல்லையா என்று கேட்பார்கள். மக்களுக்கு யோகத்தின் மீது அவ்வளவு விருப்பம். 

ஒவ்வொரு ஜாதகத்திலும் பல யோகங்கள் இருக்கின்றன ஆனால் அது எல்லாம் வேலை செய்யுமா என்று கேட்டால் சந்தேகமே. யோகங்கள் வேலை செய்யவும் பல கிரகங்களின் ஒத்துழைப்பும் தேவை. ஜாதகத்தை எடுத்தவுடன் ஒவ்வொறு யோகங்களாக எண்ணிப்பார்த்தால் ஒரு ஜாதகத்தில் குறைந்தது பத்து யோகங்களாகவது இருக்கும். அத்தனை யோகங்களும் ஒருவருக்கு கிடைத்தால் ஜாதகன் எங்கோ போய்விடுவான். ஜாதகத்தில் மரணத்தை கூட யோகமாக தான் சொல்லுவார்கள்.

ஒரு சிலரிடம் நமது சோதிடர்கள் சொல்லிவிடுவார்கள் உனக்கு மிகப்பெரிய யோகம் ஜாதகத்தில் இருக்கிறது உன்னுடைய ஜாதகத்தை யாரிடமும் காட்டாதீர்கள் என்று சொல்விடுவார்கள். பிறரிடம் காட்டினால் இவரின் யோகத்தை அவர் பிடிங்கிவிடுவார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை பிறரிடம் காட்டும்பொழுது அந்த சோதிடரின் தவறான கணிப்பை கண்டுபிடித்துவிடுவார்கள் அல்லவா அதனால் காட்டிவிடாதீர்கள் என்று சொல்லுவார்கள். இவனும் யோகம் வரபோகிறது என்று நினைத்துக்கொண்டு உட்கார்ந்துக்கொண்டு இருப்பான். கடைசியில் பார்த்தால் மரணயோகம் வந்துவிடும்.

தஞ்சாவூர் பகுதியில் இருந்து அயல்நாட்டிற்க்கு செல்லுபவர்கள் அவர்கள் சோதிடம் பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வி எனக்கு நம்பர் விழுமா என்று தான் இருக்கும். லாட்டரி சீட்டு மேல் நம்பிக்கை வைத்து எனக்கு நம்பர் விழுமா என்று கேட்பார்கள்.  இதுவும் யோகம் தான். ஆனால் அந்த யோகம் என்பது கோடியில் ஒருவருக்கு இருக்கும். அவரின் பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் உழைக்காமல் காசு வந்துவிடும். 

உழைக்காமல் வருகின்ற பணம் அனைத்தும் வருவது மாதிரியே போய்விடும். யோகம் மூலம் பணம் வரும் என்று நினைத்துக்கொண்டு அதனையே பார்த்துக்கொண்டு இருக்காமல் உழைத்துக்கொண்டும் இருக்கவேண்டியது கடமை. ஊரை விட்டு நாம் ஒடிகின்றோம் என்றால் கண்டிப்பாக நமக்கு பூர்வபுண்ணியம் கெட்டுவிட்டது என்று அர்த்தம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

என்ன என்ன யோகங்கள்  ஜாதகத்தில் இருக்கின்றன அதனை எப்படி நாம் தெரிந்துக்கொள்வது. இருக்கின்ற யோகங்கள் வேலை செய்யுமா என்பதைப்பற்றி இனி வரப்போகும் பதிவுகளில் நாம் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: