Followers

Monday, June 3, 2013

அன்னதானம்


வணக்கம் நண்பர்களே!
                    அன்னதானம் செய்தால் பல பாவங்களை போக்கும் என்று எண்ணி இன்று பலபேர் அன்னதானம் செய்கிறார்கள். 

அன்னதானம் செய்வது நல்லது தான் அதனால் பல பாவங்கள் மற்றும் புண்ணியங்களும் நமக்கு சேர்கிறது என்று நமது மதத்தில் சொல்லுகிறார்கள். பெரும்பாலும் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்தால் நல்லது. அன்னதானம் செய்யும்பொழுது எந்தவித குறிக்கோளும் இல்லாமல் செய்யப்படவேண்டும். எனக்கு அது வேண்டும் இது நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அன்னதானம் செய்யபடகூடாது. 

எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்த்து அன்னதானம் செய்யப்படகூடாது. அப்படி பிரதிபலனை எதிர்நோக்கி அன்னதானம் செய்தால் அன்னதானம் செய்வதில் அர்த்தம் இல்லை. அன்னதானத்தின் பலன் மட்டும் கண்டிப்பாக கிடைக்கும் ஆனால் அது எப்பொழுது கிடைக்கும் என்று மட்டும் தெரியாது. இந்த ஜென்மத்தி்ல் கிடைக்கலாம் அல்லது அடுத்த ஜென்மத்தில் கிடைக்கலாம் ஆனால் கண்டிப்பாக கிடைக்கும்.

இப்பொழுது நடைபெறும் அன்னதானங்கள் அதிக அளவு விளம்பரம் செய்யப்படுகிறது. அப்படி விளம்பரங்கள் எல்லாம் தேவையில்லை. அன்னதானத்திற்க்கு பணம் தேவைப்பட்டால் விளம்பரம் செய்யலாம். அன்னதானங்கள் செய்வதற்க்கு விளம்பரம் செய்யவேண்டியதில்லை. கண்டிப்பாக அன்னதானங்களை வாங்குவதற்க்கு மக்கள் வந்துவிடுவார்கள்.

சில பேர் அன்னதானங்கள் சாப்பிடுவதற்க்கு கூச்சம் படுவார்கள். அப்படி கூச்சபடதேவையில்லை. இறைவனே நமது உடலுக்கு படி அளக்கிறான் என்ற எண்ணத்தோடு அன்னதானங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். கோவில்களில் நான் பணக்காரன் நான் ஏழை என்ற வித்தியாசம் எல்லாம் வேண்டியதில்லை. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு அன்னதானத்தை பெற்றுக்கொள்ளலாம்.

நாம் அன்னதானம் செய்வதால் அவன் வாழ்த்தவில்லை என்றாலும் அவனின் வயிறு வாழ்த்தும் என்று சொல்லுவார்கள். அன்னதானம் செய்வதால் பிறரின் ஆசியை நாம் பெறுகிறோம்.  கோவில்களில் இறைவனுக்கு படைக்கும் உணவை மடப்பள்ளியில் இருந்து சந்நிதானத்திற்க்கு எடுத்துச் செல்லும்பொழுது பார்த்தீர்கள் என்றால் தலைக்கு மேல் வைத்து எடுத்துச்செல்வார்கள் அல்லது தோல்பட்டையில் வைத்து எடுத்துச்செல்வார்கள் அது ஏன் என்றால் இறைவனுக்கு படைப்பதை எடுத்துச்செல்லும் வயிறு பார்த்து ஆசைப்பட்டுவிடகூடாது என்ற எண்ணத்தில் அப்படி செய்வார்கள். மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் உணர்வுபூர்மானது. 

அன்னதானத்திற்க்கு சைவஉணவை தான் கொடுக்கவேண்டும் என்று சில பேர் சொல்லுவார்கள். அது எந்த தெய்வம் என்பதைப்பொறுத்தது சில கிராம தெய்வங்களில் அசைவம் தான் அன்னதானமாக கொடுப்பார்கள் அப்படி கொடுக்கும் கோவில்களில் நீங்கள் அசைவம் தான் கொடுக்கவேண்டும். பல தலைமுறையாக வந்ததை நீங்கள் மாற்றவேண்டாம். அப்படியே செய்யுங்கள் அது தான் நல்லது. புதுமையாக சைவம் அன்னதானம் செய்கிறேன் என்று மாட்டிக்கொள்ளாதீர்கள். சில கிராம தெய்வங்கள் அசைவம் தான் கேட்கும். அந்தந்த கோவில்களில் என்ன நடைமுறையில் இருக்கிறதோ அதனை அப்படியே கடைபிடிப்பது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: