Followers

Thursday, June 13, 2013

செல்வம் சேர என்ன செய்யவேண்டும்?


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு பல சேட்டுகளின் குடும்பங்கள் வாடிக்கையாளராக இருக்கிறார்கள். அவர்களின் வீடுகளுக்கு என்னை அடிக்கடி கூப்பிடுவார்கள் அவ்வாறு செல்லும்பொழுது அவர்கள் செய்யும் ஒரு சில செயல்கள் எனக்கு பிடிக்கும்.  

இந்த செயல்கள் தான் அவர்களுக்கு பணம் வந்துக்கொண்டே இருப்பதற்க்கு காரணமோ என்று எனக்கு தோன்றும். அவர்கள் செய்யும் செயல்கள் என்ன என்று உங்களுக்கு சொல்லுகிறேன். உங்களால் முடிந்தால் நீங்களும் செய்யலாம். சென்னையில் இருக்கும் சேட்டுகளின் வீடுகளுக்கு பார்த்தீர்கள் என்றால் புறாக்கள் அதிகமாக அவர்களின் வீடுகளுக்கு வந்து உட்கார்ந்திருக்கும் அது ஏன் என்றால் அவர்களின் மொட்டை மாடியில் புறாக்களுக்கு தேவையான உணவை அவர்கள் வைத்துவிடுகிறார்கள. 

அரிசியை இடித்து மாவுவாக்கி அந்த மாவை எடு்த்துக்கொண்டு எறும்பு இருக்கும் புற்றுகளில் போட்டுவிடுகிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதி முழுவதும் இருக்கும் எறும்பு புற்றுகளில் போட்டுவிடுகிறார்கள். எறும்பு தின்பதால் அவர்களின் கர்மாவின் வினை ஏறாது. கர்மவினை குறையும் என்று நம்புகிறார்கள். நமது மதத்தில் கூட சொல்லிவைத்திருக்கிறார்கள் ஒரு எறும்பு சாப்பிட்டால் நூறு ஏழைகள் சாப்பிட்டதற்க்கு சமம் என்று சொல்லியுள்ளார்கள்.

பசுமாடுகளை பேணிக்காப்பதற்க்கு என்றே பல டிரஸ்ட் வைத்திருக்கிறார்கள் அதற்க்கு தேவையான பணத்தை தாராளமாக அதற்கு தருகிறார்கள். சேட்டுகள் இருக்கும் வீட்டின் ரோட்டில் பசுமாடு சென்றால் அதற்கு என்று தீவனத்தை தருகிறார்கள். அவர்களின் செயல் நன்றாக இருக்கிறது அவர்கள் பணகாரர்களாக இருப்பதற்க்கும் இது தான் காரணமாக கூட இருக்கலாம் அல்லவா. நீங்களும் தாராளமாக செய்யலாம் நண்பர்களே.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


3 comments:

Anonymous said...

ஜீவகாருண்யத்தை மேம்படுத்தும் நல்ல செயல்கள் இவை .
புறாக்களுக்கும் , காக்கைகளுக்கும் உணவளிக்கலாம் .
அவ்வாறு செய்யும் போது சிறிது தண்ணீரும் கூட வைக்க வேண்டும் .
உண்மையில் நீங்கள் கூறுவது போல் அனைவரும் செய்து புண்ணியக்
கணக்கைக் கூட்டிக் கொள்ள வேண்டும் .இவற்றில் சில நான் பின்பற்றுபவையே .
பகிர்விற்கு நன்றி !

rajeshsubbu said...

//*
ஸ்ரவாணி said...
ஜீவகாருண்யத்தை மேம்படுத்தும் நல்ல செயல்கள் இவை .
புறாக்களுக்கும் , காக்கைகளுக்கும் உணவளிக்கலாம் .
அவ்வாறு செய்யும் போது சிறிது தண்ணீரும் கூட வைக்க வேண்டும் .
உண்மையில் நீங்கள் கூறுவது போல் அனைவரும் செய்து புண்ணியக்
கணக்கைக் கூட்டிக் கொள்ள வேண்டும் .இவற்றில் சில நான் பின்பற்றுபவையே .
பகிர்விற்கு நன்றி ! *//

வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி. உங்களைப்போல் அனைவரும் பின்பற்றினால் நல்லது.

Anonymous said...

காளிக்கு பூஜை செய்வது எப்படி என்று சொல்லுங்கள்