Followers

Tuesday, June 25, 2013

தீட்சை


வணக்கம் நண்பர்களே!
                     புலன் கவர்ச்சியிலே ஆழ்ந்து அறியாமையில் மூழ்கி துன்பத்தில் சூழ்ந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு மனிதனை மெய்பொருள் உணர்ந்த ஒரு குரு அம்மனிதனுக்கு அகத்தவத்தின் மூலம் ஆன்மாவையும் மெய்ப்பொருளையும் அறிந்து கொள்ளும் வழி வகையைக் காட்டி கொடுத்தல உபதேசம் அல்லது தீட்சை எனப்படும். தீட்சை என்பது வட சொல் கொடுத்து குறைப்பது என்று பொருள். குருவானவர் உயிராற்றலைப் பாய்ச்சி  பாவப் பதிவுகளை குறைப்பது எனலாம். இது பலவகைப்படும்.

1 சமய தீட்சை

சரியை மார்க்கம் தொடங்குமுன் செய்யப்பெறுவது

2 விசேஷ தீட்சை

 கிரியா மார்க்கத்திற்கு உரியது.

3 நிர்வாண தீட்சை

 யோகத்திற்க்கும் ஞானத்திற்க்கும் உரியது.

4. ஸ்பரிச தீட்சை 

  குரு தன் திருக்கரங்களால் சீடனைத் தொடுவது.

5. நயன தீட்சை

            குரு தன் அருட்பார்வையால் சீடனை நோக்குவது

6. மானச தீட்சை

             குரு தன் மனத்தால் சீடனது மனதை தன்வயப்படுத்துவது

7. வாசக தீட்சை

              வாசகம் என்பது உபதேசம் இது குரு உபதேசம் எனப்படும். நல்ல அருள் வாக்குகளைச் சொல்வது.

8. மந்திர தீட்சை

             குரு சீடனுக்கு மந்திரங்களை உபதேசித்து அருளுவது.

9. யோக தீட்சை

    யோகம் என்பது சேர்க்கை குரு சீடனை இறைவனோடு ஒன்றவைப்பது யோக முறைகளைச் சொல்லித் தருவது.

10 ஓளத்திரி தீட்சை

 ஹோமகுண்டத்தில் ஹோமாக்கினியில் சீடனுடைய கர்மாவை தகித்து அவனை தூய்மைபடுத்துவது.

அம்மா அப்பா என்று இரண்டு உயிர்களின் விந்து நாத சேர்க்கையால் உருவானவன் மனிதன். இந்த இரண்டு உயிர்களின் இணைப்பு காமம். உடலுறவு என்ற செய்கையால் உண்டாகிறது. எனவே மனிதன் புலன் கவர்ச்சியாலும் பொருள் பற்றுடனும் மயக்கமுற்று வாழ்வில் இருப்பான். இந்த மயக்கத்திலிருந்து மீட்டு விழிப்பு நிலையில் அறிவைத் திருப்ப ஒரு ஞானியின் உயிர் அவனில் கூட வேண்டும். உரிய பருவம் வந்த பின்பு குருவின் உயிர் ஒரு மனிதனுடன் சேருவதே உபதேசத்தின் பொருளாகும். குரு உபதேசம் பெற்றவன் வாழ்வில் முழுமை பெறுகிறான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: