Followers

Saturday, December 14, 2013

ஆன்மீக அனுபவங்கள் 140


ணக்கம் ண்பர்களே!
                    இது செய்யலாம் அதனை செய்யக்கூடாது என்று சொல்லுவது எல்லாம் நாம் பிறந்த காலத்தில் இருந்தே கற்றுக்கொண்டது தானே தவிர வேறு ஒன்றும் அதில் இருக்காது. வாழ்க்கையில் கற்றுக்கொண்டதை வைத்து தான் வாழ்ந்து வருகிறோம்.

விவேகானந்தர் சொல்லுவார் ஒவ்வொரு நாளும் மனிதன் கற்றுக்கொண்டு தான் வருகிறானே தவிர வாழ்வதே இல்லை என்று சொல்லுவார். உண்மையான ஒன்று தான் கற்றுக்கொண்டே வருகிறீர்கள் வாழ்வது கிடையாது.

தியானம் என்பது புத்தியை வைத்துக்கொண்டு அப்படி போ இப்படி போ என்று சொன்னால் எப்படி அது தியானமாகும். அது புத்தியின் கட்டுப்பாட்டிற்க்குள் வாழபழக்கம் ஏற்படுத்திக்கொள்கிறது.

இந்த காலத்தில் தியானவகுப்பு எல்லாம் இப்படி தான் செல்லுகிறது. அவர்கள் சொல்படி நீங்கள் நடக்கின்றனர். கற்ற புத்தி உங்களின் கற்காத புத்தியை கட்டுப்படுத்துகிறதே தவிர அங்கு தியானம் என்பது நடைபெறவில்லை என்றே அர்த்தம்.

தியானம் என்பது கவனித்தல் மட்டுமே. உங்களின் எண்ணங்களை அப்படியே கவனித்துக்கொண்டு இருத்தல். நல்ல எண்ணங்களும் வரலாம். தீய எண்ணங்களும் வரலாம். அதனை அப்படியே கவனித்துக்கொண்டு இருந்தால் போதும். உங்களின் மனதை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. கவனித்தல் தான் தியானம். அது போக போக ஒன்றும் இல்லாத நிலைக்கு செல்லும். அங்கு அதுவாகவே உங்களுக்கு நடைபெறும். 

அதுவாகவே அங்கு நடைபெறும் நேரத்தில் யாரும் தேவையில்லை. யாரும் தேவையில்லை என்ற நிலை வரும்பொழுது நீங்கள் கடவுளாக மாறுகிறீர்கள். உங்களை இப்படி விட்டால் நீங்கள் ஒரு குரு. 

உங்களை கட்டுபடுத்தும்பொழுது மட்டுமே நீங்கள் அடிமையாகிவிடுகிறீர்கள். அங்கு எதுவும் நடைபெறுவதில்லை. இந்த காரணத்தால் மட்டுமே உங்களுக்கு ஆன்மீகவகுப்பு என்பது எடுப்பது இல்லை. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

கற்றல் பொதுவில் எளிது.
ஆனால் அதை வாழ்வில் நடைமுறைப்படுத்துதல்
என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அதற்குக் காரகம்
வகிக்கும் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருக்கும் போது
மட்டுமே கற்ற வித்தையினால் நற்பலன் விளையும். அதனால்
நான் உங்களைப் பணிவன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால்
நீங்கள் ஆன்மீக வகுப்பு எடுத்து எங்களுக்கெல்லாம் கற்பிக்க வேண்டும்
. அது உங்கள் கடமை மற்றும் விதியாகவும் அதைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது
அவரவர் விதியாகவும் கருதியே செயல்பட வேண்டும். நாம் ஊதுகிற
சங்கை ஊதி வைப்போம். அது செவிடர் காதுக்கு எட்டாமல் போவது
நம் தவறு ஒன்றும் இல்லையே .....