Followers

Wednesday, August 3, 2016

சந்திரன்


ணக்கம்!
          கோயம்புத்தூர் சென்று இருந்தபொழுது நண்பர் ஒருவரோடு சில மணி நேரம் இருக்க நேர்ந்தது. ஒவ்வொரு நண்பரையும் சந்திக்கும்பொழுது நமக்குள் இருக்கும் சோதிட அறிவை கொஞ்சம் தட்டி எழுப்பவது போல அமைவது உண்டு.

ஒருவருக்கு சந்திரன் மட்டும் நன்றாக இருந்தால் அவருக்கு எல்லாம் தானாகவே அமைந்துவிடும் என்று சொல்லுவது உண்டு. நேற்றைக்கு குரு பெயர்ச்சி நடந்தது அது கூட சந்திரனை மையமாக வைத்து தானே சொல்லுகிறோம். 

பிறந்த பொழுது உள்ள சந்திரனுக்கு எதுவும் நடந்துவிடகூடாது என்று தான் இந்த பெயர்ச்சிக்கு எல்லாம் இந்தளவுக்கு பயப்படுகிறோம் அதனால் சந்திரனுக்கு என்று தனி மதிப்பு ஜாதகத்தில் உண்டு.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் போதும் உங்களின் வாழ்க்கை சூப்பராக இருக்கும். சந்திரன் சரியில்லை என்றால் கொஞ்சம் கஷ்ட ஜீவனம் தான் நடந்த வேண்டியிருக்கும்.

சந்திரன் சரியில்லை என்றாலும் கூட அதனை சரி செய்தாவது நாம் முன்னேறி  தானே ஆகவேண்டும். உங்களின் வாழ்க்கை சரியில்லை என்று நினைப்பவர்கள் உங்களின் பிறந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சந்திரன் எங்கு உள்ளது சந்திரன் வளர்பிறை சந்திரனாக இரு்கின்றதா அல்லது தேய்பிறை சந்திரனாக இருக்கின்றதா என்று பாருங்கள். 

சந்திரன் சரியில்லை என்று நினைப்பவர்கள் உடனே என்னை தொடர்புக்கொண்டு அதற்கு என்ன செய்யலாம் என்பதை ஆலோசனை செய்துக்கொள்ளுங்கள்.

ஆடி மாத அம்மன் பூஜைக்கு என்று இதுவரை பணம் அனுப்பாத நண்பர்கள் உடனே அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Jaya prakash said...

அண்ணா உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி