Followers

Monday, May 1, 2017

இனிய தொடக்கம்


ணக்கம்!
          இந்த மாதமும் அம்மன் அருளால் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று வேண்டி ஆரம்பிக்கிறேன். அம்மன் பூஜை நாளை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்திவிடுங்கள்.

மே ஒன்று உழைப்பாளர் தினம். பகவத்கீதையில் கிருஷ்ணர் சொன்னதை மறுமுறை உங்களுக்கு சொல்லுகிறேன். உழைப்பை நீங்கள் போட்டுவிடவேண்டும். உழைப்பை போட்டுவிட்டு பலனை எதிர்பார்க்கும்பொழுது உங்களுக்கு நடக்கும். உழைப்பை போடாமல் நீங்கள் பலனை எதிர்பார்த்தால் ஒன்றும் நடக்காது.

பலர் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தான் வீட்டிற்க்குள்ளே இருக்கின்றனர். கண்டிப்பாக உழைப்பு இல்லாமல் அதிர்ஷ்டம் அடிக்காது. கர்மாவை செய் பலனை எதிர்பார்க்காதே என்று கிருஷ்ணர் சொன்னார் என்றால் வேலையை நீங்கள் செய்துவிடவேண்டும் அதன் பிறகு பலனை அவர் கொடுப்பார்.

நம்ம ஆளுங்க வேலையே செய்யாமல் இருந்துக்கொண்டு அதிர்ஷ்டம் வரும் என்று பார்ப்பார்கள். அப்படி இருந்தால் ஒன்றும் நடக்காது. உழைக்கும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

அம்மன் பூஜை முடிந்தவுடன் பொதுபரிகாரத்தை ஆரம்பிக்க போகிறோம். அதற்கும் தயாராக தங்களின் ஜாதகத்தை எடுத்து வரும் பலன்களை பார்த்து உங்களுக்கு எப்படி இருக்கின்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நாளைக்கு மூன்று பதிவுகள் ஜாதககதம்பத்தில் வரும். ஒரு நாளைக்கு மூன்று பதிவுகள் வரவில்லை என்றால் அடுத்த நாள் அதற்கு ஈடு செய்யும்விதமாக பதிவுகள் அதிகமாக வரும். அனைத்து நண்பர்களும் படித்த பயன்பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

நல்லது,நன்றி அண்ணா