Followers

Friday, May 5, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          ஒரு நண்பர் கேள்வி ஒன்றை அனுப்பினார். எல்லா கிரகங்களுக்கும் பரிகாரம் செய்வது போல் பித்ருதோஷத்திற்க்கு நீங்கள் பரிகாரம் செய்வீர்களா என்று கேட்டார்.

கிரகங்களுக்கு நாம் பரிகாரம் செய்யலாம் ஆனால் பித்ருதோஷத்திற்க்கு நீங்கள் தான் பரிகாரம் செய்யவேண்டும். உங்களின் கடமையை நீங்கள் தான் செய்யவேண்டுமே தவிர எங்களை போல் உள்ளவர்களை நாடி செய்யகூடாது.

பித்ருதோஷத்திற்க்கு நீங்கள் செய்யும் பரிகாரம் உங்களின் இரத்த உறவு சம்பந்தப்பட்டவர்களோடு செய்யலாம். இரத்த உறவு இல்லாதவர்களிடம் சென்று இதனை செய்ய சொல்லகூடாது. உங்களின் முன்னோர்கள் உங்களோடு மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்கு நீங்களே செய்துக்கொள்ளுங்கள்.

பித்ருதோஷம் அடுத்தவர்கள் செய்கிறேன் என்று சொன்னால் கூட அங்கு நீங்கள் சென்று செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். எந்த கிரகத்திற்க்கும் பரிகாரம் அடுத்தவர்களிடம் செய்யலாம் பித்ருதோஷம் மட்டும் நீங்களே செய்யுங்கள்.

திதி கொடுப்பது கூட ஒரு சில செய்தியை கேட்டேன். ஒரு சில குடும்பங்களில் திதி ஒரு முறை செய்தால் மறுமுறை செய்யவேண்டும். அதனால் அதனை தவிர்க்க வேண்டும் என்று விட்டுவிடுகிறார்கள். நம்முடைய அதிகப்பட்ச கடமை இது தான். இதனை கூட செய்யவில்லை என்றால் என்ன செய்வது. உங்களின் கடமையை நீங்கள் செய்தே தீரவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, Thithi theriyavillai endral, entha naalil thithi kodukalam? Melun Rameswarathil Thilak Homam seithalun Thithi koduka venduma. Avargal 30 varudam kalithu Thilak Homam seithal pothum enkirargal. Ithai yepadi eduthu kolvathu.
Thanks sir..
KJ