Followers

Saturday, February 9, 2013

ஆன்மீக அனுபவங்கள் 66


வணக்கம் நண்பர்களே!
                     ஆன்மீக அனுபவங்கள் பகுதியில் தியானத்தைப்பற்றி பார்த்து வந்தோம் இடையில் ஒரு சில பதிவுகள் வேறு கருத்துக்களை பார்த்தோம். தியானம் செய்பவர்கள் தியானத்தை எழுதுங்கள் என்று கேட்கிறார்கள். அனைத்தும் சொல்லவேண்டும் என்பது எனது எண்ணம் தான் ஆனால் எனது நேரப்பற்றாக்குறையால் முடிந்தளவு எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

தியானத்தை பற்றி நான் எழுதும் போது சில நண்பர்கள் கேட்டார்கள் அது என்ன பஞ்சபூத்தை வைத்து எழுதிவருகிறீர்கள் என்ன காரணம் என்று கேட்டார்கள். மனித உடலில் இருக்கும் உறுப்புகள் யாவும் பிரபஞ்சத்தில் இருந்து வந்த துகள்கள் தான் அதனால் பஞ்சபூதத்தை மையமாக வைத்து தந்தேன். அண்டத்தில் இருப்பவை பிண்டத்திலும் இருக்கின்றன என்ற கோட்பாடுடன் உங்களுக்கு தருகிறேன்.

முதலில் பூமியை மையமாக வைத்து ஒரு தியானத்தை பார்த்தோம் உடல் பூமியை போன்று இயங்கும் சக்தியால் உங்கள் உடலால் பூமியை தொடுவது போல் தந்தேன்.

அடுத்ததாக வான் தியானத்தை தந்தேன். நீங்கள் வானை பார்க்கும் போது அப்படா எப்படிபட்ட அண்டத்தில் நாம் ஒரு சிறிய துகள் என்று உங்களது மூச்சை இழுத்திவிடுவீர்கள். அதனால் அவ்வாறான தியானத்தை பார்த்தோம்.

நீர் தியானம் Water Meditation

நமது மனித வாழ்க்கையில் முக்கியமானதுமான நீரைவைத்து ஒரு தியானத்தை பார்ப்போம். உங்களின் அருகில் கடல் இருந்தால் அந்த இடத்திற்க்கு செல்லுங்கள். அந்த கடலை உற்றுநோக்குங்கள் அடுத்ததாக அதில் இறங்கி காலை நனைத்துவிட்டு வெளியில் வந்து கடலை பாருங்கள் எவ்வளவு நேரம் செய்தாலும் இது மிகவும் சக்தியை கொடுக்கும். உங்களின் ஊரில் கடல் இல்லை என்றால் ஒரு வாளியில் தண்ணீரை நிரப்பி அந்த தண்ணீரை பாருங்கள் அது போதும்.

நீங்கள் கடலை பார்க்கும்போது உங்களின் மனதில் இங்கு இருந்து தான் நான் வந்தேன் எனது முன்னோர்கள் அனைவரும் இங்கு இருந்து தான் வந்தோம் என்று நினைத்தால் போதும். அனைத்து உயிர்களும் கடலில் இருந்து தான் தரைக்கு வந்தது. இப்படி பார்க்கும் மனநிலையில் நல்ல மாற்றம் வரும்.

இந்த பூமியில் முக்கால் பங்கு நீர் தான். நமது உடலிலும் நீர் தான் நிரம்பியுள்ளது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

6 comments:

KJ said...

Panja boothangal... Excellent lessons sir. Thanks for sharing.

rajeshsubbu said...

//* KJ said...
Panja boothangal... Excellent lessons sir. Thanks for sharing. *//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

KJ said...

Sir, some astrologers ask to relocate to someother place if poorva punniyam is not good. How effective that would be. Praying kula theivam ll be helpful in those cases. ?

rajeshsubbu said...

//*KJ said...
Sir, some astrologers ask to relocate to someother place if poorva punniyam is not good. How effective that would be. Praying kula theivam ll be helpful in those cases. ? *//

பூர்வ புண்ணியம் கெட்டு குலதெய்வத்திற்க்கு போனாலும் அங்கும் பிரச்சினை தான் வரும். குலதெய்வம் பிரச்சினையை கொடுக்க ஆரம்பித்துவிடும். இது சிக்கல் நிறைந்த சமாச்சாரம்.

KJ said...

Nandri ayya. Poorviga veetai maatruvathal (going away from native) yethum payanullatha?

rajeshsubbu said...

//* KJ said...
Nandri ayya. Poorviga veetai maatruvathal (going away from native) yethum payanullatha? *//

வணக்கம் மாற்றி பார்க்கலாம். பூர்வகத்தோடு தொடர்பு அற்று போகும்போது ஒரளவு நன்மையளிக்கும்.