Followers

Tuesday, February 26, 2013

தனுசு ஐந்தில் குரு




வணக்கம் நண்பர்களே!
                     தனுசு ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

தனுசு ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். 

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

செவ்வாயின் வீட்டில் குரு அமருவதால் கோவில் வேதபண்டிதர்களுக்கு பிரச்சினை கொடுத்திருப்பார் மற்றும் சொந்த சகோதரனையும் பாதிக்கசெய்திருப்பார்.

அடையாளம்?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறம். பிற மொழிகளை நன்கு பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறம்போல் இருந்திருப்பார். மலையாள மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

வெட்டுகாயம் ஏற்படுத்தி அல்லது தீயால் காயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கைகளை துண்டித்து அதனால் ரத்தகாயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

மர்ம ஸ்தானங்களில் தாக்கி உயிரை எடுத்து இருப்பார்கள்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி அதன் மூலம் இரத்தம் வெளிவந்து கொல்லப்பட்டுருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம் 

செவ்வாய்கிழமையில் குரு பகவானை வணங்கி வாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் அடையாளம் காணலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: