Followers

Tuesday, February 26, 2013

ஆன்மீக அனுபவங்கள் 72



வணக்கம் நண்பர்களே!
                     பெங்களுரில் ஒரு வீட்டிற்க்கு சென்றுருந்தேன். அந்த வீட்டில் உள்ள ஐயாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடலை தருகிறேன்.

அவர்: இந்தியா மிகப்பெரிய ஆன்மீகநாடு என்று சொல்லுகிறார்களே இதனால் என்ன முன்னேற்றத்தை இந்தியா அடைந்தது?

நான் : இந்தியா ஒரு முன்னேற்றத்தையும் ஆன்மீகத்தால் அடைந்ததில்லை. ஆன்மீகத்தை வைத்துக்கொண்டு திருடி சம்பாதிப்பதற்க்கு உள்ள வழிகளை கற்றுள்ளார்கள். இந்தியாவில் அந்த காலத்தில் இருந்து பல சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் அவர்களால் ஒன்றும் பெரிய அளவில் மாற்றம் வந்ததில்லை வரபோவதும் இல்லை.

நீங்களே பாருங்கள் திருப்பதிக்கு ஒரு நாள் ஒரு கோடி பணம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த பணத்தில் 75 சதவீதம் செலவு செய்தாலும் மீதி 25 சதவீதத்தை எடுத்து இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திற்க்கும் கொடுத்திருந்தால் இன்று இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமமும் அனைத்து வசதிகளையும் பெற்றுருக்கும். இதைப்போல் இந்தியாவில் உள்ள கோவில்களின் மொத்த வருமானத்தை பார்த்தால் எங்கேயே போய்விடும். நாம் இதனை செய்தோமா இல்லையே பிறகு எப்படி இந்தியா மேம்படும். 

இந்தியாவில் இருக்கும் நபர்கள். தன்னுடைய வருமானத்தில் கிள்ளி கொடுத்திருந்தால் இந்தியாவில் ஏழை என்பதே கிடையாது. மனிதனுக்கு தேவை ஆன்மீகம் கிடையாது. அவன் அவன் சம்பாதிக்க ஆன்மீகத்தை ஒரு கருவியாக வைத்துக்கொள்கிறார்கள். 

மனிதன் தான் செய்யும் தவறுக்கு ஒரு வடிகாலாக ஆன்மீகத்தை பயன்படுத்திக்கொள்கிறானே தவிர உண்மையான ஆன்மீகத்தை அவன் அடைய விரும்பவில்லை. 

அவர்:  இன்று கோவில்களில் கடுமையான கூட்டம் இருக்கிறது. எந்த விஷேசத்தையும் விடுவதில்லை இது மிகப்பெரிய மாற்றம் தானே?

இது மாற்றம் இல்லை அபத்தம் மனிதன் செய்யும் பாவங்களின் அளவுகோல் உயர்ந்துவிட்டது மனிதனுக்குள் நியாயம் என்பது செத்துவிட்டது அதனால் அவனுக்கு பயம் மிகப்பெரிய பிரச்சினை வந்துவிடுமோ என்று நினைக்கிறேன்.அந்த பயத்தால் அவன் சாமியை நாடிச்செல்லுகிறான்.

ஒரு உதாரணத்தை தருகிறேன் பாருங்கள் உங்களின் தந்தை காலத்தில் இருக்கும் நிலங்களை பார்த்தால் அந்த அந்த நிலத்திற்க்கு பட்டா இருக்காது நீ இந்த நிலத்தை வைத்துக்கொள் நீ இந்த குளத்துக்கு பக்கத்தில் இருக்கும் நிலத்தை வைத்துக்கொள் என்று வார்த்தையில் சொல்லி நிலத்தை வைத்திருப்பார்கள். 

இன்று நிலைமை என்ன  ஒவ்வொரு நிலத்திற்க்கும் பத்து பட்டா வைத்துள்ளார்கள். இது பத்தாது என்று மூன்று போலி பட்டாவையும் தயாரித்து வைத்துக்கொண்டு அவன் அவன் சொந்தம் கொண்டாடுகிறான். மனிதனிடம் நியாயம் என்பது செத்துவிட்டது அதனால் தான் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இது ஆரோக்கிய விசயம் கிடையாது அபத்தம் தான். தான் செய்யும் தவறுக்கு ஆன்மீகம் துணை வேண்டும். அப்படி துணை வரும் ஆன்மீகம் தான் அவர்களுக்கு பிடிக்கும். 

இதில் ஆன்மீகத்தை கொடுப்பவனை தவறு சொல்லமுடியாது. மக்களுக்கு என்ன தேவையோ அதனை அவன் செய்வான். அப்பொழுது மட்டுமே அவனால் குப்பை கொட்டமுடியும்.

அவர் :நீங்கள் சொல்லும் கருத்தை புத்தர் சொன்னார். அவர் சொன்ன போதனையை நாட்டை விட்டே துரத்திவிட்டார்கள். ஏன் என்றால் திருட்டுதனத்தை செய்யமுடியாது. அவர் சொன்ன கருத்தை பின்பற்றும் நாடுகள் இன்று நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

நான் :புத்தர் சொல்லுவதை வைத்து தனிமனிதன் சம்பாதிக்கமுடியாது. இந்தியாவில் தனிமனிதன் சம்பாதிக்க வேண்டும் அதற்கு தேவையான மதத்தை மட்டுமே வைத்திருப்பார்கள். புத்தரை துரத்திவிட்டார்கள்.

அவர் :அனைவருக்கும் அனைத்தும் தெரிகிறது இது நல்ல விசயம் இது கெட்ட விசயம் என்று தெரிகிறது பிறகு ஏன் அனைவருக்கும் நல்ல விசயத்தை பிடிக்கமாட்டேன்கிறது. 

நான் :இந்தியாவின் தலைவிதி. 

அவர் : அப்படி என்ன விஷேச தலைவிதி.

நான் : இந்தியா அமைந்திருப்பது சனியின் ராசி. சனி கிரகம் திருட்டுதனத்தை காட்டக்கூடிய கிரகம். திருடனை போய் போலீஸ் வேலை பார்க்க சொன்னால் எப்படி இருக்கும். இவன் தொழிலே திருடுவது. மக்கள் மட்டும் என்ன நீதிமான்களாக இருப்பார்கள். திருட்டுதனமாக தான் இருப்பார்கள்.

அவர் :என்ன இப்படி சொல்லுகிறீர்கள்.

நான் : நானும் திருடன், நீங்களும் திருடன் சுற்றி இருப்பவர்களும் திருடர்கள். நாடு எப்படி முன்னேற்றம் அடையும். திருடுவதில் முன்னேற்றம் வேண்டுமானால் நடைபெறலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

6 comments:

dreamwave said...

இந்தியா மிகப்பெரிய ஆன்மீகநாடு என்று சொல்லுகிறார்களே இதனால் என்ன முன்னேற்றத்தை இந்தியா அடைந்தது?


எந்த விதத்தில் இந்திய நாடு முன்னேற்றம் அடைய வில்லை ???

dreamwave said...

தயவு செய்து இந்த பதிவை நீக்கவும்

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே
நல்ல கேள்வியை திருப்பி எனக்கு கேட்டுள்ளீர்கள். இதற்கான பதிலை நான் பதில் தருகிறேன் அப்பொழுது அது அனைவருக்கும் சென்று அடையும் நண்பரே.

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே பதிவில் பதில் தரலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் பதிவையே நீக்க வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். மறுபடியும் இந்தியா முன்னேற்றம் என்பது ஒரு மனிதனுக்கு ஆயிரம் மனிதன் பலி கொடுக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. இதனைப்பற்றி பல உதாரணங்களுடன் கொடுக்கமுடியும் வேண்டாம் திசை மாறிவிடும் என்பதால் விட்டுவிடுகிறேன். அந்த பதிவை பாராட்டி பல மெயில் வந்துள்ளது இருந்துவிட்டு போகட்டும்.

dreamwave said...

நீங்கள் சொல்வது சரி ! நாம் பல உயிர்கல் இழைக வேண்டும் இது காலத்தின் கட்டாயம்.

மாற்றம் நீச்சயம் நிகழும்.

தனி காட்டு ராஜா said...

இந்தியா சனியின் ராசியில் அமைந்து உள்ளதா ?
அது எப்படி ?
பூமி தான் சுற்றி கொண்டே உள்ளதே ? அப்போ இந்தியா மட்டும் சுற்றாமல் சனி ராசி மண்டலத்தில் உள்ளதா ?

இந்தியாவை போல் வளமான நாடு ஒரு காலத்தில் இருந்ததில்லை ...... கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? இந்தியா வளமான நாடக இருந்த தால் தானே ஒரு காலத்தில் ?? அப்போ சனி ராசி மண்டலம் என்ன ஆனது ?

இப்போ இந்தியா பிச்சை கார நாடு என்பதில் சந்தேகம் இல்லை