Followers

Friday, July 1, 2016

இனிய தொடக்கம்:: இலவச சேவை


ணக்கம்!
          ஒவ்வொரு மாதமும் தொடங்கும்பொழுது ஒவ்வொரு விசயத்தை சொல்லுவோம். அதன் படி நடப்பதற்க்கும் ஒரு் சில நாட்கள் தேவைப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் ஒரு சில நண்பர்கள் அவர்களின் ஜாதகத்தை அனுப்பி எதாவது ஒன்றை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இலவச சேவையை நிறுத்திவிட்ட பிறகு இப்படி கேட்கிறார்களே என்று நினைப்பது உண்டு.

உண்மையாக பல நண்பர்கள் கஷ்டபடுகிறார்கள் என்பது தெரியும். அவர்களுக்கு உதவமுடியவில்லை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அம்மன் அருளால் அவர்களுக்கும் வாய்ப்பு தருகிறேன்.

உங்களால் கண்டிப்பாக பணம் கட்டமுடியாதநிலையில் இருந்தால் நீங்கள் உங்களின் ஜாதகத்தை கணித்து எனக்கு மெயிலில் அனுப்பி வையுங்கள். உங்களுக்கு தேவையான ஒரு கேள்வியை மட்டும் கேட்டு அனுப்புங்கள். உங்களுக்கு தேவையான பதிலை நான் மெயிலில் அனுப்பி வைக்கிறேன். போனில் தொடர்புக்கொள்ளவேண்டாம்.

இலவச ஆலோசனையில் பரிகாரம் எல்லாம் கேட்கவேண்டாம். பலனை மட்டும் கேட்கலாம். அவசியமான கேள்வியாக இருந்தால் நல்லது. உங்களின் ஜாதகத்தை சாப்ட்வேரில் கணித்து அதன் பக்கத்தில் என்ன தசா என்ன புத்தி நடக்கிறது என்பதையும் இணைத்து அனுப்பினால் நல்லது.

இலவச ஆலாேசனையில் கண்டிப்பாக போனில் தொடர்புக்கொள்ளவேண்டாம். மெயில் அனுப்பிய உடன் பதிலை தரமுடியாது. எனக்கு வேலை அதிகம் பொறுமையாக தான் பதிலை தருவேன், 

இலவசசேவை பணம் இல்லாதவர்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளட்டும். சும்மா அனைவரும் கேட்டு தொந்தரவு செய்யவேண்டாம். பணம் இல்லாதவர்கள் பயன்பெற்று நன்றாக இருக்கட்டும். நமது நண்பர்கள் அவர்களுக்கு வழிவிடுங்கள்.

மெயில் ஐடி : astrorajeshsubbu@gmail.com

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: