Followers

Tuesday, July 19, 2016

செவ்வாய் தசா


ணக்கம்!
          செவ்வாய் கிரகம் ஒருவருக்கு நன்றாக அமையவேண்டும். இயற்கையில் பாபகிரகமாக இருந்தாலும் செவ்வாய் கிரகம் நன்றாக அமையும்பொழுது மட்டுமே பல நல்ல விசயங்கள் நடக்கும்.

வீடு மனை மற்றும் தைரியம் இது எல்லாம் கிடைக்கும். நான் சொன்னது மூன்று விசயமாக இருந்தாலும் இதற்குள் பல விசயங்கள் அடங்கிவிடும்.

இன்றைய காலத்தில் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய ஆசை என்ன என்றால் ஒரு வீடு வேண்டும் என்று தான் சொல்லுவார்கள். வசிக்க ஒரு வீடு இருந்தால் போதும் மீதி எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்பார்கள்.

ஒரு மனிதன் வீணாக போவதற்க்கு கடவுள் கூட காரணமாக இருப்பார் என்று தோன்றுகிறது. வீடு வாசல் மனை தைரியம் இது எல்லாம் இருந்தால் மனிதன் நன்றாக வாழ்ந்துவிடுவான் என்று நினைத்து கடவுள் செவ்வாய் தசாவை மட்டும் குறைவான வருடம் வைத்திருக்கிறார். நாம் வீணாக போவதற்க்கு நம்முடைய வாழ்நாளில் கால்பகுதியை கெட்ட தசாவுக்கு வைத்திருக்கிறார்.

செவ்வாய் தசா மட்டும் மனிதர்களுக்கு அதிகம் வைத்திருந்தால் இந்த உலகத்தையே அவர் பிடித்துவிடுவார் என்று தான் கடவுள் குறைந்த வருடம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு கம்பீரமாக அனைத்திலும் சுறுசுறுப்போடு ஒரு மனிதனை இயங்க வைக்க செவ்வாய் தசா மாதிரி வேறு தசா இயங்குவதில்லை என்பது தான் உண்மை.

ஒரு மனிதனுக்கு செவ்வாய தசா ஆரம்பித்துவிட்டால் அதுவரை தூங்கிக்கொண்டிருந்த மனிதன் சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவான். உலகமே அவனை விட குறைவாக தான் செயல்படுகிறது என்பது போல அவனின் செயல் இருக்கும்.

செவ்வாய் கிரகம் போர்கிரகம் அல்லவா. போர்வீரன் தூங்கிக்கொண்டிருந்தால் என்ன ஆகும் உயிர் போய்விடும். செவ்வாய் கிரகத்தின் தன்மை ஒருவனை போர் வீரன் போல் செயல்படவைக்கும். நமக்கு செவ்வாய்கிரகத்தின் பலன் குறைவாக இருக்கின்றது அதே நேரத்தில் செவ்வாய் தசாவும் வரவில்லை என்றால் அப்பொழுது செவ்வாய் கிரகத்திற்க்கு என்று நீங்கள் விரதம் அல்லது வழிபாடு செய்து உங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளலாம்.

செவ்வாய் கிரகம் எப்படி இருந்தாலும் செவ்வாய் கிரகத்தின் தசாவில் நன்றாகவே இருக்கும். அதாவது செயல்பாடு நன்றாக இருக்கும். ஒரு சில சிக்கல் வந்தாலும் முருகனை வணங்கிவிட்டு செய்தால் செவ்வாய்கிரகத்தின் தசாவில் நல்ல முன்னேற்றத்தை காணமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: