Followers

Friday, July 29, 2016

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரகிரகம் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர் சுகபோக வாழ்க்கை வாழ்பவராக இருப்பார். அதிகமாக சுக்கிரன் கிரகம் சுத்தமாக கெட்டுபோகாது. ஒரளவு தன்னுடைய பலனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கும்.

சுக்கிரன் ஒரளவு நல்ல பலனை கொடுத்துக்கொண்டு இருப்பதால் தான் மக்களுக்கு சாப்பாடு தட்டுபாடு இல்லாமல் கிடைக்கிறது. ஒருவருக்கு உணவு கிடைக்க சுக்கிரன் தான் காரகமாக இருக்கின்றார். இன்றைய காலத்தில் ஒரளவுக்கு அனைவருக்கும் உணவு தட்டுபாடு இல்லாமல் கிடைப்பதற்க்கு இவர் தான் காரகம்.

சுக்கிரன் தன்னுடைய கருணையை காட்டுவதால் தான் உலகத்தில் மழையே பெய்கிறது. நல்லமழையை பொழிந்து நாட்டை செழிப்பாக வைத்திருப்பதற்க்கும் காரகமாக இருக்கிறார்.

சுக்கிரன் ஒருவருக்கு அதிகமாக பலன் கொடுக்கும்பொழுது அவர் செல்வ செழிப்போடு இருக்கிறார். அனைத்து செல்வங்களும் அவரை நோக்கி வருகிறது.

சுக்கிரன் ஒருவருக்கு சரியில்லை என்றால் மனைவி சரியாக அமைவதில்லை. மனைவி அமைந்தால் கூட ஏனோ தானோ என்று இருப்பார். தன்னுடை வாழ்க்கை வீணாக போய்விட்டது என்று கவலைப்படவைக்கும். 

சுக்கிரனின் காரத்துவம் அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. சுக்கிரன் நன்றாக இருந்தாலும் சரி நன்றாக இல்லாவிட்டாலும் சரி தன்னுடைய வாழ்க்கையை நன்றாக வைத்துக்கொள்ள அம்மன் வழிபாடு செய்யுங்கள்.

நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: