வணக்கம்!
ஆடி மாதத்தில் ஒவ்வொருவருக்கும் தனியாக பூஜை செய்யப்படுவது உண்டு. அதனைப்பற்றி அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டு இருந்தேன்.
ஆடி மாதத்தில் தனியாக பூஜை செய்வதற்க்கு என்று பணம் ஒரு சில நண்பர்கள் அனுப்பி வைத்தனர். அதனை வைத்து அனைவருக்கும் செய்யுங்கள் என்று சொல்லிருந்தனர். ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் நடைபெறும் பொதுவான பூஜைக்கு என்று அனைவரிடமும் இருந்து பணம் அனுப்ப சொல்லுவது உண்டு. பொதுவான அம்மன் பூஜையைப்பற்றிய அறிவிப்பு பிறகு வரும்.
உங்களுக்கு என்று ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று நோக்கத்தோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். உங்களின் கோரிக்கை அதுவும் நீண்டநாள்கள் உள்ள கோரிக்கையை அனுப்புங்கள். ஒவ்வொரு நாளும் நடைபெறும் பூஜையில் அந்த கோரிக்கையை வைக்கிறேன்.
கோரிக்கை என்றவுடன் உங்களின் அனைத்து கோரிக்கையும் வைக்கவேண்டாம். எது உங்களுக்கு முக்கியமாக இருக்கின்றதோ அதனை அனுப்புங்கள்.
கோரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரி : astrorajeshsubbu@gmail.com
முற்றிலும் இலவச சேவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கோரிக்கையை அனுப்பும்பொழுது உங்களைப்பற்றி விபரத்தை அனுப்புங்கள்.
உங்களின் பெயர்
உங்களின் தந்தை மற்றும் தாயார் பெயர்
எந்த ஊர்
எந்த நட்சத்திரம் மற்றும் இராசி
உங்களைப்பற்றிய ஒரு சிறிய தகவல்கள் இருந்தாலும் அனுப்பிவைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment