வணக்கம்!
காலத்தைப்பற்றி காலையில் நாம் எழுதிய பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் அதனைப்பற்றி கேட்டனர். இதுநாள் வரை நீங்கள் தொலைக்காட்சியில் தினப்பலன் படிப்பதை கூடவா கவனிக்காமல் இருக்கின்றீர்கள். அதுவே உங்களுக்கு நன்றாக இருக்கும்பொழுது உங்களின் முழுபலனும் கிடைக்கும்பொழுது எப்படி எல்லாம் உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்வீர்கள்.
ஒன்றைப்பற்றி சொல்லுகிறேன். சந்திராஷ்டம நாளில் நமக்கு பிரச்சினை வருகின்றது என்பது தெரியும். உங்களின் அனைத்து சந்திராஷ்டம நாட்களையும் கவனித்தால் ஒரு சில சந்திராஷ்டமநாளில் உங்களுக்கு நல்லது நடக்கும்.
அப்பொழுது சந்திராஷ்டம நாளில் கூட நல்லது நடக்கிறது என்றால் கண்டிப்பாக பல நல்ல நாட்களையும் நாம் வீணடித்துவிட்டு இருப்போம். பொதுவாக இது எல்லாம் தொழில் செய்பவர்கள் கடைபிடிப்பார்கள். ஒரு சிலர் இன்று பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு நாளையும் நன்றாக கவனித்து வந்தால் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நஷ்டம் அடையாமல் இருக்கலாம்.
சந்திரன் இரண்டாவது வீட்டிற்க்கு வரும்பொழுது நல்ல பணவரவு வரும். உங்களின் ஜாதகத்தை பொறுத்து தான் இது வரும். ஒரு சிலருக்கு லட்சக்கணக்கில் பணம் வரும் ஒரு சிலருக்கு ஒரு ரூபாய் பணம் வரும். வருவதை நன்றாக வரவழைக்க என்ன எல்லாம் செய்யலாம் என்பதையும் கணித்து கண்டுக்கொள்ளமுடியும். ஒழுங்காக ஜாதகத்தை கணிக்கும்பொழுது இது எல்லாம் உங்களுக்கு புலப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment