Followers

Tuesday, July 26, 2016

கிரகத்தின் இரட்டை தன்மை


வணக்கம்!
          ஒரு கிரகம் ஏன் நம்மை அதிகம் தாக்குகிறது. அந்த கிரகத்தின் காரத்துவம் உடைய ஒன்றும் நாம் இதுவரை செய்யவில்லை என்று அர்த்தம். நாம் ஒன்று நல்லவனாக இருக்கிறோம் இல்லை என்றால்  ஒரே கெட்டவனாக மாறிவிடுகிறோம்.

இரண்டையும் சேர்த்து இருப்பதில்லை. நீங்கள் கெட்டவனாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. நல்லவனாக இருங்கள் கெட்ட சமாச்சாரம் உடைய வேலையிலும் கொஞ்சம் தலைகாட்ட வேண்டும். இது எப்படிங்க என்று கேட்கலாம்.

நமக்கு விரைய வீடு என்று சொல்லும் பனிரெண்டாவது வீட்டின் காரத்துவம் உடைய வேலையை நாம் செய்வதில்லை. அதாவது செலவே செய்வதில்லை. செலவே செய்யவில்லை என்றால் அனைத்தையும் சேர்த்து ஒரு நாள் மருத்துவசெலவு செய்ய நேரிடும்.

இதனை எப்படி நாம் கெட்ட வேலை செய்வது என்று கேட்கலாம். நீங்கள் நல்லவனாகவே இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒரு ஏழையின் திருமணத்திற்க்கு ஏதோ உங்களால் முடிந்த பண உதவி செய்துவிடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு ஏழை மருத்துவமனையில் இருக்கிறார் என்றால் அந்த ஏழையை மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு ஏதோ உங்களால் முடிந்த உதவியை செய்துவிட்டு வரலாம்.

நாம் மருத்துவமனைக்கும் சென்று விட்டோம் அதோடு செலவையும் செய்துவிட்டோம் என்று நாம் விரைய வீட்டிற்க்கு உள்ள காரத்துவத்தை செய்துவிட்டு வந்துவிடலாம்.

சரி நாம் இப்படி செலவு செய்வது சரியில்லை. இது ஒரு பாக்கியஸ்தானத்தை தான் குறிக்கிறது இது தர்ம கணக்கில் வருகிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களின் பகுதியில் குடிக்காரர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மது குடிப்பதற்க்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு வந்துவிடலாம்.

இரண்டு தன்மையும் நீங்கள் தொட்டுவந்துவிட்டதாக உங்களின் மனம் உணர்ந்துவிடும் ஒரளவுக்கு இந்த பரிகாரம் உங்களுக்கு பலன் தரும். முழுமையான பலன் வேண்டும் என்று நினைத்தால் அதற்குரிய பரிகாரத்தை செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: