Followers

Thursday, July 14, 2016

குரு பெயர்ச்சி


ணக்கம்!
          எப்பொழுது ஒரு கிரகம் பெயர்ச்சி நடந்தாலும் அந்த கிரகத்தை பற்றி அதிகம் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி பேச வைக்க பல சோதிடர்கள் நினைக்கிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கும். தற்பொழுது சோதிடர்கள் சும்மா இருந்தாலும் தொலைதொடர்புக்காரர்கள் சும்ம இருக்க வைப்பதில்லை. ஏதாவது ஒன்றை கிளப்பி விட்டுவிடுவார்கள்.

தற்பொழுது நிறைய நண்பர்கள் தொடர்புக்கொண்டு சார் குரு பெயர்ச்சி நடக்கிறது. எனக்கு என்ன பிரச்சினை என்ன நல்லது என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பல பேர்கள் கிளப்பிய பயத்தால் நமக்கு வியாபாரம் நடக்கிறது என்று சொல்லவேண்டும். அப்படி இருந்தாலும் அனைத்து பழைய நண்பர்கள் என்பதால் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. 

குரு பெயர்ச்சியை கண்டு யாரும் அச்சப்படதேவையில்லை. கோச்சாரபலன்கள் அதிகம் நடப்பதில்லை. அப்படியே அது நடந்தாலும் பெரிய பாதிப்பு எல்லாம் நடக்காது. ஜாதக கதம்பத்தை படிக்கும் நண்பர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாது என்பது உண்மை. அதற்கு காரணம் குரு கிரகம் நன்றாக இருப்பதால் தான் இப்படிப்பட்ட பிளாக்கை எல்லாம் படிக்கமுடிகிறது.

சரி நான் பயந்து தான் தீருவேன் என்றால் உங்களுக்கும் ஒன்றை செய்யலாம். அனைவருக்கும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஏதாவது ஒரு கோவிலில் ஒரு நிகழ்வை நாம் நடத்தலாம். தற்பொழுது குரு இருக்கும் கோவில்களுக்கு நம்மை தலைகாட்ட கூட விடமாட்டார்கள். குரு பெயர்ச்சி முடியட்டும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

prasanna said...

Great. Really Appreciatable response regarding Guru Peyarchi. Thanks.

Prasanna