வணக்கம்!
ஒவ்வொரு நண்பர்களும் என்னிடம் சோதிடம் பார்க்கும்பொழுது கேட்கும் கேள்வி சார் எனக்கு ஒரு வீடு அமையுமா என்று கேட்பார்கள் அல்லது நிலம் ஏதாவது அமையுமா என்று கேட்பார்கள். ஒவ்வொரு மனிதனின் ஆசையும் இது தான் அதன் பிறகு தான் வேறு ஆசைகள் இருக்கும்.
ஜாதகத்தில் நான்காவது வீடு உங்களின் சொந்த வீட்டை காட்டும். நான்காவது வீடு சுகஸ்தானம் என்று சொல்லுவது கூட நல்ல வீடு அமைந்தால் நல்ல சுகமாக வாழலாம் என்ற கணக்கில் சொல்லிருக்கலாம். நான்காவது வீடு பாதிப்படைந்தால் அதனால் பல சிக்கல்கள் தான் உருவாகும்.
நான்காவது வீட்டு அதிபதி எப்படி இருக்கிறார் என்பதை பாருங்கள். அதோடு நான்காவது வீட்டு எந்த கிரகத்தின் பாதிப்பு வருகின்றது என்று பாருங்கள். தீயகிரகத்தின் பார்வை பட்டாலும் இது பாதிப்படையும். இதனை எல்லாம் பார்த்துவிட்டு அதன் பிறகு நான்காவது வீட்டு அதிபதியை பலப்படுத்துங்கள்.
செவ்வாய் என்றாலே அது நான்காவது பார்வை என்று சொல்லுவார்கள். அதாவது நிலத்திற்க்கு காரகன் வகிப்பவர் செவ்வாய் தான். உங்களின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகம் எப்படி இருக்கின்றது என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
நான்காவது வீட்டு அதிபதி மற்றும் செவ்வாய் கிரகத்திற்க்கு நீங்கள் பரிகாரம் செய்தால் போதும் அல்லது வழிபாட்டையாவது மேற்க்கொண்டு வாருங்கள். கண்டிப்பாக ஒரு வீடு உங்களுக்கு அமையும்.
என்னுடைய நண்பர் ஒருவருக்கு நான்காவது வீடு செவ்வாய் வீடாக அமைந்தது. அதாவது மகரலக்கினம். செவ்வாய் நீசமாக அமர்ந்திருந்தார். அவருக்கு நான் செவ்வாய் கிரகத்தை அதிகமாக பலப்படுத்த முருகன் கோவிலுக்கு செவ்வாய் கிழமை தோறும் சென்று வழிபட்டு வாருங்கள் என்று சொன்னேன். அவரும் சென்று வழிப்பட்டு வந்தார் ஆண்டவன் புண்ணியத்தால் அவர் தற்பொழுது வீடு கட்டிக்கொண்டு வருகிறார்.
உங்களின் ஜாதகத்தை எடுத்து பாருங்கள். நான்காவது வீட்டைப்பற்றி நன்றாக அலசுங்கள். அந்த வீட்டை பார்த்து உங்களுக்கு வீடு அமையுமா அல்லது அமையாது என்று தெரிந்துவிடும். அமையாது என்று தெரிந்தால் நன்றாக வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்கள். கண்டிப்பாக அமைந்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment