Followers

Monday, July 4, 2016

சந்திரன்


ணக்கம்!
          சந்திரன் ஒருவருக்கு பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்தால் அவர்கள் அதிகம் வெளியூர் பயணம் செய்பவராக இருப்பார். அதுவும் கோவில் கோவிலாக சுற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.

இன்றைய காலத்தில் ஆன்மீகத்திற்க்கு என்று தன்னை அர்ப்பணித்துக்கொள்பவர்கள் அதிகம் பேர்கள் இருக்கின்றார்கள். வாரம் வாரம் எப்படியும் ஒரு புண்ணிய கோவில்கள் என்று சென்றுக்கொண்டு இருப்பார்கள்.இவர்களின் ஜாதகத்தை நாம் பார்த்தால் அவர்களுக்கு சந்திரன் பனிரெண்டாவது வீட்டில் இருக்கும்.

கோச்சாரப்படி நமக்கு சந்திரன் பனிரெண்டாவது வீட்டிற்க்கு வரும்பொழுது நமக்கு ஏதாவது ஒரு வழியில் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.பயணம் செய்யாவிட்டாலும் வீட்டை விட்டு வெளியேறி ஏதாவது ஒரு காேவிலுக்காகவது செல்ல வைத்துவிடும். 

பனிரெண்டாவது வீட்டில் சந்திரன் அமையபெற்றவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சொல்லலாம். என்ன கேது இருந்தால் தானே மோட்சம் என்பார்கள் என்று கேட்க நினைக்கும். சந்திரனும் ஒரு சிலருக்கு கொடுக்கும்.

சந்திரன் கோச்சாரப்படி பனிரெண்டுக்கு வரும்பொழுது ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள். கண்டிப்பாக நல்ல பலனை நீங்கள் அனுபவிக்கமுடியும். எப்படியும் பயணம் செல்ல போகின்றீர்கள் அது கோவிலாக இருக்கட்டுமே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: