வணக்கம்!
இன்று ஆடி வெள்ளி என்பதால் காலையில் இருந்து பூஜை மற்றும் ஹோம வேலையில் இருந்தேன். தற்பொழுது தான் அதனை எல்லாம் முடித்துவிட்டு பதிவை தருகிறேன்.
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்காக சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதற்கு என்று நமது நண்பர்கள் பணம் செலுத்தியுள்ளனர். அனைத்து நண்பர்களிடமும் வேண்டுதலையும் அனுப்ப சொல்லிருந்தேன். அவர்களுக்காகவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆடி மாதம் என்பதால் நீங்களும் ஒவ்வொரு சக்தி வாய்ந்த அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அன்று தவறாமல் கோவிலுக்கு சென்றுவிடுங்கள்.
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஒரு நண்பரின் பேரில் அவருக்கு என்று சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் அம்மனுக்கு நடைபெற்றது. பொதுவேண்டுதல் வைத்து நேற்று வரை மெயில் செய்தவர்களுக்கு வேண்டுதல் வைத்திருக்கிறேன். இன்று பல மெயில்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக செய்யப்படும். இதுவரை அனுப்பாத நண்பர்கள் அனைவரும் அனுப்புங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment