வணக்கம்!
ஆடி மாதம் என்பதற்க்காக அதனைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்த காரணத்தால் சோதிடபதிவை தரமுடியவில்லை. சோதிடத்தில் உள்ள பிரச்சினையை சரி செய்வதற்க்கு தான் இப்படிப்பட்ட விழாகளை எல்லாம் வைத்திருக்கிறார்கள்.
உடல் முழுவதும் எண்ணையை பூசிக்கொண்டு மண்ணில் உருண்டால் ஒட்டுகிற மண் தான் ஒட்டும். அதாவது நமக்கு எந்த மண் உடலில் ஒட்டவேண்டும் என்று இருக்கின்றதோ அது தான் நமக்கு ஒட்டும்.
ஜாதககதம்பத்தை அதிகபேர் படிக்கின்ற ஆட்கள் இருக்கின்றனர். ஜாதக கதம்பத்தில் வருகையை குறைவாக காட்டும் ஆனால் மொபைலில் பல நண்பர்கள் படிப்பது எல்லாம் எண்ணிக்கையில் வருவதில்லை. அதிகம் பேர் படிப்பதற்க்கு காரணம் என்ன என்பதை சொல்லவரவில்லை. இதனை எல்லாம் தேடி படிக்க காரணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்திக்கும் பிரச்சினை தான். நம்ம அப்பா ஒழுங்காக இருந்தால் நாம் இதனை எல்லாம் ஏன் தேடி படிக்க போகிறோம்.
நம்ம அப்பா ஒழுங்காக புண்ணியத்தை செய்தால் நமக்கு நல்லது நடந்து இருக்கும். புண்ணியத்தை செய்தால் ஒட்டுகிற மண் நிறைய ஒட்டும். புண்ணியத்தை செய்திருந்தால் நாம் இந்த நேரம் ஒவ்வொரு நாடாக பறந்து சென்றுக்கொண்டிருப்போம்.
ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நம்மை தாக்குகின்றது என்றால் சும்மா தாக்குவதில்லை. நம்முடைய கணக்கில் புண்ணியம் இல்லை என்று தான் அர்த்தம். கிரகங்களை சமாளிக்க முதலில் புண்ணியத்தை செய்து விடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment