Followers

Saturday, July 2, 2016

அம்மன் பூஜை


வணக்கம்!
         ஒவ்வொரு மாதமும் நம்முடைய அம்மன் பூஜையை சிறப்பாக செய்யவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு செய்துக்கொண்டு இருக்கிறேன். வரும் பணத்தை வைத்து என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக செய்கிறேன்.

அம்மன் பூஜைக்கு பங்களிப்பவர்கள் மற்றும் அம்மன் பூஜை நடைபெறும் நாட்களில் பூஜைக்கு உதவுபவர்களால் அது சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அனைத்தும் அம்மன் செயல்.

பல பேர்கள் இப்படிப்பட்ட பூஜையில் விருப்பபட்டு கலந்துக்கொள்கிறார்கள். பாக்கியஸ்தானம் பலப்படும் என்பதால் பூஜையில் கலந்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களும் இந்த பூஜையில் கலந்துக்கொள்ளலாம்.

அம்மன் பூஜை வருகின்ற 10 ஆம் தேதிக்குள் நடைபெறும். வேண்டுதல் வைத்து நிறைவேறியவர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தலாம். பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களும் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: