Followers

Thursday, July 28, 2016

கிரகப்பெயர்ச்சி


ணக்கம்!
         ஒவ்வொரு கிரக பெயர்ச்சிக்கும் பெரிய அளவில் பயமுறுத்துவது சோதிடர்களின் வேலையாக இருக்கும். கோச்சாரபலன்கள் எல்லாம் பெரிய அளவில் வேலை செய்வதில்லை என்பது மட்டும் உண்மை. ஒரளவு வேலை செய்யும்.

எந்த கிரகப்பெயர்ச்சி நடந்தாலும் அதில் ஒரு குறிப்பு ஒன்று தருவார்கள். அதாவது உங்களுக்கு குரு தசா நடந்தால் பலன் மாறுபடும் என்று சொல்லுவார்கள். இதனை நான் படித்தது எல்லாம் பல வருடங்கள் சென்றுவிட்டது. அந்த காலத்தில் எல்லாம் இப்படி போடுவார்கள்.

குரு தசா நடந்தால் பிரச்சினை இல்லை என்று சொல்லுவது ஏன் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு நிறைய பிடிப்படும். குரு கிரகம் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியஸ்தானத்திற்க்குரிய வேலையை செய்யக்கூடிய கிரகம்.

நமக்கு பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் நமக்கு வரக்கூடிய எப்பேர்பட்ட கெட்ட கிரகத்தின் பெயர்ச்சியும் நம்மை தாக்காது என்பது நன்றாக தெரிகிறது.

குரு தசா நமக்கு நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நாம் பாக்கியஸ்தானம் சொல்லக்கூடிய வேலையில் கவனத்தை செலுத்தினால் நமக்கு ஏற்படக்கூடிய தீயகிரகத்தின் பாதிப்பில் இருந்து விலகிவிடலாம்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள நண்பர்களை சந்திப்பதாக இருக்கிறேன். சந்திக்க விருப்பம் இருக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: