வணக்கம்!
சந்திரனை வைத்து பலன் சொல்லவேண்டும் என்றால் ஒருவர் வளர்பிறையில் பிறந்தார் என்றால் அவர் வாழ்க்கை நன்றாக உயர்ந்துக்கொண்டே இருக்கும். தேய்பிறை சந்திரனாக இருந்தால் அவரின் வாழ்க்கை நன்றாக இருந்து அதன்பிறகு தேய்ந்துக்கொண்டே செல்லும் என்று பலனை சொல்லலாம்.
ஒருவர் அமாவாசையில் பிறந்தார் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டும் அல்லவா. அமாவாசையில் பிறந்தால் அவருக்கும் நல்ல வாழ்க்கை அமையும். அதாவது அதுவும் வளர்பிறை சந்திரன் போலதான் செயல்படும்.
அமாவாசையில் பிறந்தால் அவர் திருடன் என்று சொல்லிவிடுவார்கள். அது படம் பார்த்த காரணத்தால் அல்லது கிராமத்தில் உள்ளவர்கள் சொல்லுவார்கள்.
அமாவாசையில் பிறந்தால் திருடன் என்பது முற்றிலும் தவறான ஒரு கருத்து. அமாவாசையில் பிறந்த நிறைய ஜாதகங்களை பார்த்து இருக்கிறேன். மிகவும் நல்லவர்களாக இருக்கின்றார்கள். எதார்த்தமாக இருக்கின்றனர். தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர்.
அமாவாசையில் பிறந்தவர்களுக்கு ஈர்க்கும் சக்தி அதிகம் இருக்கின்றது. அவர்களை நோக்கி நிறைய பேர்கள் வருவார்கள். அதாவது அவர் வழியாக நிறைய சாதிக்கமுடியும் ஏதாவது உதவுவார்கள் என்று வருகின்றனர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment