Followers

Friday, July 1, 2016

இலவச ஆலோசனை விளக்கம்


ணக்கம்!
          இன்று கூட பத்து ஜாதகங்கள் வந்தன. அனைத்தையும் பார்த்துவிட்டு பதில் அனுப்பினேன். ஒன்று மட்டும் புரிகிறது இவர்களுக்கு நல்ல நேரம் என்பது இருக்கின்றது ஆனால் அவர்களுக்கு சரியான ஒரு வழிகாட்டி என்பது இல்லை.

நமது பதிவில் கூட பல பதிவுகளில் சொல்லிருக்கிறேன். பல வழிமுறைகளை சொல்லிருக்கிறேன் அதனை எல்லாம் பயன்படுத்தினாலே போதும் அப்படியே மேலே வந்துவிடலாம். இவர்களின் ஜாதகத்தை பார்த்தவரை ஒன்று மட்டும் தோன்றுகிறது. சுடர் விளக்கினாலும் தூண்டுகோல் தேவை என்பது மட்டுமே.

ஜாதக கதம்பத்தில் பல தகவல்கள் இருக்கின்றன அனைத்தையும் பயன்படுத்துங்கள். கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் அடையலாம். ஒவ்வொரு ஊருக்கும் நான் வரும்பொழுது வந்து சந்தியுங்கள். கண்டிப்பாக ஏதாவது ஒரு தீர்வு உங்களுக்கு கிடைக்கும்.

இலவச ஆலோசனையில் நீங்கள் டெக்னிக்கலாக கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கமுடியாது. அதாவது எனக்கு எந்த கிரகம் பவர் புல்லாக இருக்கின்றது. எந்த கிரகம் பவர் இல்லாமல் இருக்கின்றது என்பது போல உள்ள கேள்விகளை தவிர்க்கவும். பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த இலவச ஆலோசனை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: