Followers

Thursday, September 13, 2018

தர்மம் தலைகாக்கும்


வணக்கம்!
          விரைவில் நவஅம்மன் (சண்டி) யாகம் ஆரம்பிக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பிவையுங்கள்.  தர்மகாரியங்களையும் உடனே செய்துவிடுங்கள்.

ஒன்பதாவது வீடு என்னும் பாக்கியஸ்தானம் பலம்பெறுவதற்க்கு தர்மகாரியங்களை செய்யவேண்டும். நம்முடைய வேலைகள் எந்தவிதத்திலும் தடையின்றி நடைபெறுவதற்க்கு பாக்கியஸ்தானத்தின் அதிபதி மற்றும் பாக்கியதானத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் தடையை ஏற்படுத்த கூடாது.

பாக்கியஸ்தானத்திற்க்கு கிடைக்கும் கிரகங்களின் பார்வையும் நன்றாக இருக்கும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் எதனை தொட்டாலும் அது துலங்கும். இதில் எங்கு தடைப்பட்டாலும் நாம் எடுக்கின்ற முயற்சி தோல்வியை தந்துவிடும்.

பாக்கியஸ்தானத்தை பலப்படுத்துங்கள் என்று சொல்லுவது எல்லாம் நம்முடைய வேலைகள் தடைப்படகூடாது என்பதால் தான் அடிக்கடி சொல்லுவது உண்டு. பாக்கியஸ்தானத்திற்க்கு ஏதாவது ஒரு தடை வந்துக்கொண்டு இருந்தால் அதற்கு பரிகாரம் தர்மம் செய்வது மட்டுமே சிறந்த பரிகாரமாக இருக்கமுடியும்.

முன்காலத்தில் எல்லாம் பெரியோர்களை கண்டால் காலில் விழுந்து வணங்க சொல்லுவார்கள். இந்த காலத்தில் இது எல்லாம் மாறிவிட்டது. பெரியோர்களின் ஆசி என்பது பாக்கியஸ்தானத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் ஒரு அற்புத வரப்பிரசாதம்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: