Followers

Friday, September 14, 2018

ஜாதகத்தில் எந்த வீடு அதிபயங்கரமானவை?


வணக்கம்!
          ஒரு மனிதரை அதிகமாக பாதிக்கும் வீடாக இருப்பது மறைமுகஸ்தானம் என்று சொல்லுவார்கள். மறைமுகஸ்தானமான வீட்டின் தசா அல்லது அதன் அதிபதி ஒரு மனிதருக்கு அதிகமான துன்பங்களை கொடுக்ககூடிய ஒரு வீடாக இருக்கும் என்பார்கள். உண்மையில் அப்படி இருக்கின்றதா என்று கேட்டால் அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்லுவேன்.

ஒரு மனிதரை அதிகமாக பாதிக்கக்ககூடிய வீடாக இருப்பது ஏழாவது வீடும் ஐந்தாவது வீடு தான் அதிகமாக பாதிக்கும். ஒரு மனிதனுக்கு அவனுக்கு அமையும் துணை மற்றும் அவனின் வாரிசுகள் தான் அதிகமாக அவனை போட்டு கொல்லும் தன்மை உடையது. 

அவனின் துணைக்காக கஷ்டப்பட்டு ஓடிக்கொண்டு இருப்பான் அதன் பிறகு அவனின் வாரிசுக்காக அதிகம் ஓடிக்கொண்டு இருப்பான். இந்த ஓட்டத்தில் அவனின் ஆயுளை பாதியாக குறைத்துவிடும் தன்மை இந்த இரண்டு வீட்டிற்க்கும் உண்டு. இதனை யாரும் மறுக்கமுடியாது.

மனைவி மக்களை காப்பாற்றவேண்டும் என்று ஓடுவதில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணிக்க நினைப்பான். இந்த இரண்டும் அவனை போட்டு படுத்தி எடுத்துவிடும். இதனை அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்.

இந்த இரண்டு வீடு போல ஜாதகத்தில் வேறு வீடுகள் கிடையாது என்பது தான் உண்மை. இந்த இரண்டு வீட்டையும் ஒருத்தன் சமாளித்துவிட்டால் அவன் மற்றைய வீடுகளை எளிதில் சமாளித்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: