Followers

Wednesday, September 5, 2018

ஒன்பதில் இராகு


வணக்கம்!
          ஒன்பதாவது வீட்டில் இராகு கிரகம் இருந்தால் என்ன பலன் என்பதைப்பற்றி பார்க்கலாம். என்னங்க இது சின்னபிள்ளை தனமாக இருக்கின்றது நாங்கள் எல்லாம் சோதிடத்தில் ஆராய்ச்சி செய்தே முடித்துவிட்டோம் என்று சொல்லும் நண்பர்களும் இருக்க தான் செய்கின்றனர். பரவாயில்லை இதனையும் சேர்த்து படியுங்கள்.

ஒன்பதாவது வீட்டில் இருந்தால் பெரும்பாலும் அவர்க்கு பூர்வீக சொத்துகளில் பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டு இருக்கும். பூர்வீக சொத்தை அப்படி வைத்துவிட்டு வேறு சொத்துகளை வாங்க ஜாதகர் நினைப்பார். 

இன்றைய காலத்தில் யார்க்கு தான் பூர்வீக சொத்தில் பிரச்சினை இல்லை என்று கேட்கலாம். ஒன்பதில் இராகு கிரகம் இருக்கும் நண்பர்களுக்கு அதிகமான சொத்து பிரச்சினை வரும். இராகுகிரகம் ஒன்பதில் இருந்தால் சொத்தில் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

இராகு கிரகம் ஒன்பதில் இருக்கும் நண்பர்களுக்கு வெளிநாட்டு தொடர்பு வழியாக அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பார் இராகு. உள்ளூரில் இருக்கும் வாய்ப்பை விட வெளியூரில் நல்ல வாய்ப்பு வந்துக்கொண்டே இருக்கும்.

இராகு கிரகம் ஒன்பதில் இருந்தால் ஞானம் சம்பந்தப்பட்ட விசயங்களில் நல்ல அறிவு இருக்கும். எந்த விசயத்தை தெளிவாக அதே நேரத்தில் ஆணித்தரமாக சொல்லக்கூடியவர்களாக ஜாதகர் இருப்பார்.

உங்களின் ஜாதகத்தைப்பற்றி நிறைய விசயங்களை தெரிந்துக்கொள்ள என்னை நேரில் சந்தித்து உங்களின் ஜாதகத்தைப்பற்றி நிறைய கருத்துக்களை தெரிந்துக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: