Followers

Friday, September 7, 2018

கேது


வணக்கம்!
          கேது கிரகத்தை நாம் குறைவாக மதிப்பிடமுடியாது. கேதுவை கண்டு பயப்படுவது அதன் தசாவாக இருந்தாலும் அது அமரும் இடத்தில் இருந்து என்ன என்ன தீங்கு செய்யமுடியுமோ அதனை எந்தவிதத்திலும் குறைவாக கொடுக்காமல் சரியாக நம்மை போட்டு காலி செய்துவிடும்.

ஜாதகத்தில் கேது அமரும் இடத்தில் உள்ள பெரும்பான்மையான விசங்கள் கெட்டுவிடும். அதனையே நாம் மீண்டும் மீண்டும் துலாவிக்கொண்டு இருக்ககூடாது. அதனையே பிடித்து தொங்கிக்கொண்டு இருக்ககூடாது என்கிறேன்.

எடுத்துக்காட்டாக ஏழில் கேது அமருகின்றது என்று வைத்துக்கொள்வோம் வரும் துணை கொஞ்சம் லூசு போல தான் இருக்கும் இதனை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அதனை நாம் சொல்லி திருத்த பார்க்கலாம் அதனை ஏற்கவில்லை என்றால் இந்த வாழ்க்கை இப்படி தான் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கேது கிரகம் எப்பொழுது எல்லாம் கோச்சாரபடி தொந்தரவு கொடுக்கும் ஸ்தானத்திற்க்கு வருகின்றதோ அப்பொழுது எல்லாம் அந்த ஸ்தானத்தில் இருந்து வரும் பிரச்சினைகளை உன்னிப்பாக பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பிரச்சினை வந்தால் இது சின்ன பிரச்சினை தானே என்று இருந்துவிடகூடாது அது எப்படி செல்லும் என்பதை நன்கு கவனித்து அதற்கு தகுந்தார் போல் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டுவிட்டால் வரும் ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: