Followers

Saturday, September 29, 2018

வாரிசுகளுக்காக புண்ணியம்


வணக்கம்!
          ஒரு சில ஊர்களில் நான் பார்த்த விசயத்தைபற்றி ஒன்றை சொல்லுகிறேன். ஒருவர் குடும்பம் இருந்தால் அந்த குடும்பத்தின் தலைவர் அதாவது தந்தை ஒருவர் சந்நியாசி போல அலைந்திருந்தால் அவர்களின் பிள்ளைகள் இன்று பெரியளவில் சாதித்து இருக்கின்றனர்.

சந்நியாசி போல இருந்தவர்களின் பிள்ளைகள் ஒரு ஊரில் பெரிய மனிதர்களாக இருக்கின்றனர். இது எப்படி என்று தெரியவில்லை ஆனால் இது உண்மையாக பல இடங்களில் நான் பார்த்தும் இருக்கிறேன். பலர் சொல்லியும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இன்று நாம் செய்யும் செயல் நமது சந்ததினரை சென்று அடையும் என்பது மட்டும் உண்மையாக இருக்கின்றது. நமது சந்ததினரை நல்ல படியாக உருவாக்குவதற்க்கு நீ்ங்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். நாம் செய்கின்ற செயலில் அதிகளவு நன்மையை நோக்கி செல்வது போல இருக்கவேண்டும். 

பல பெற்றோர்களை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பகட்டாக வாழவேண்டும் என்று நினைத்துக்கொண்டு முடிந்தளவுக்கு ஆட்டம் போடுவது அதன் பிறகு அவர்களின் வாரிசுகள் வீணாக போய்விடுகின்றன. ஒரு வயதிற்க்கு மேல் உங்களின் வாரிசுகளின் மேல் தான் அதிக கவனம் வைக்கவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் சம்பாதிக்க பல வழிகளை செய்யவேண்டியிருக்கின்றது என்றாலும் நேரம் கிடைக்கும்பொழுது புண்ணியத்தையும் செய்துக்கொண்டு வாருங்கள். உங்களின் வாரிசுகள் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: