Followers

Monday, September 24, 2018

தானத்தில் சிறந்த தானம்


வணக்கம்!
         ஏழை மக்கள் தானம் செய்வதற்க்கு என்று ஒரு சில விதிவிலக்கு உண்டு. பணம் வைத்திருப்பவர்கள் பெரியளவில் தானம் செய்வார்கள் அதுவே ஏழையாக இருந்தால் அதனை செய்யமுடியாது. ஏழையாக இருந்து பணக்காரர்ரகள் செய்யும் பெரியளவில் உள்ள தானத்தை சிறியளவில் செய்து அதே புண்ணியத்தை பெறுவதற்க்கு நமது சாஸ்திரத்திலும் வழி இருக்கின்றது. 

பசு தானம் செய்வது ஒரு பெரிய தானமாக கருதப்படும். நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி பசு தானத்தை செய்வார்கள். ஏழையாக இருக்கும் அந்தணர்களுக்கு பசு தானம் செய்ய சொல்லுவார்கள். ஏழையாக இருக்கும் எல்லா ஜாதியினர்க்கும் பசு தானம் செய்யலாம்.

இன்றைய காலத்தில் ஒரு பசு மாட்டை செய்யவேண்டும் என்றால் குறைந்தளவு நாற்பது ஆயிரத்தில் இருந்து ஐம்பது ஆயிரம் செலவு செய்யவேண்டும். மாட்டின் விலை அப்படி இருக்கின்றது. இதனை செய்யவேண்டும் என்றால் நல்ல பணம் வைத்திருப்பவர்கள் தான் செய்ய முடியும்.

பசு மாட்டிற்க்கு ஒப்பாக ஒன்றை செய்வார்கள். பலாபிஞ்சை பசு மாட்டிற்க்கு ஒப்பாக கொடுக்கலாம். பலா பழத்தின் பிஞ்சு காய்கறி கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி தானம் செய்யலாம். பசு மாட்டிற்க்கு ஒப்பான பலன் கிடைக்கும். நேற்று இதனை வாங்கினேன் ஒன்று இருபது ரூபாய் விலையில் வாங்கினேன். ஒரு தர்மத்திற்க்கு வாங்கினேன். 

பலாபிஞ்சை வாங்கி என்ன செய்வார்கள் என்று கேட்கலாம். பெரும்பாலான அந்தணர்களின் வீடுகளில் இதனை சமைத்து உண்ணுவார்கள். இதனை வாங்கி தானமாக நாம் கொடுக்கலாம். நீங்கள் முடிந்தால் அந்தணர்களுக்கு வாங்கிக்கொடுங்கல் அல்லது உங்களின் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் நபர்களுக்கு கூட இதனை கொடுக்கலாம்.

நீங்கள் இதனை வாங்கி தானமாக கொடுத்தால் பசு மாட்டை தானமாக கொடுத்த பலனை நீங்கள் அனுபவிக்கமுடியும். பல ஊர்களில் இது வழக்கத்திற்க்கு உள்ளது. பணம் இல்லாத பட்சத்தில் இதனை கொடுக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: