Followers

Sunday, June 30, 2013

ஆன்மீக அனுபவங்கள் 100


வணக்கம் நண்பர்களே!
                    என்னை வீடுகளுக்கு கூப்பிடும் நண்பர்கள் அனைவரும் பலவிதமான கேள்விகளை கேட்கிறார்கள். கேட்கும்பொழுதே நடுவில் உங்களை சங்கடபடுத்துகிறேனா என்றும் கேட்கிறார்கள் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். மற்ற மதத்தில் இருப்பவர்கள் வீடுகளில் சத்சங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். நம் மதத்தில் அது இல்லாமல் இருந்தது ஆனால் இப்பொழுது அதற்க்கான நல்ல வளர்ச்சி தென்பட ஆரம்பித்துவிட்டது.

நான் ஒருபோதும் சங்கடபடமாட்டேன். நான் கற்றதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள தான் இப்பதிவை நடத்திக்கொண்டுருக்கிறேன். மற்ற மதத்திற்க்கும் நமது மதத்திற்க்கும் அதிகமான வேறுபாடு இருக்கிறது நமது மதம் அனைத்தும் பயிற்சியில் இருக்கிறது. அவர்களின் மதம் ஏடுகளில் அதிகம் இருக்கும். பயிற்சியில் ஏற்படும் அனுபவத்தை என்னால் வெளியில் சொல்லமுடியாது. ஏன் என்றால் அதனைப்பற்றி சொல்லி தெரிவிக்கமுடியாத அற்புதம் இருப்பதால் அப்படி சொல்லுகிறேன். அனைத்தும் அனுபவம் மட்டுமே. 

சாதாரணமாக வீடுகளில் கடைபிடிக்கும் பழக்கம் மற்றும் ஆன்மீகவிசயங்களை என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்தவரை நான் உங்களி்டம் பகிர்ந்துக்கொள்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை மற்ற குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். எதனையும் மறைத்து வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால் இதனை சொல்லுகிறேன். மறைத்தால் நமது மதத்தில் உள்ள மக்களை நாம் இழந்துவிடுவோம். 

உங்களின் குழந்தைகளுக்கும் அனைத்து ஆன்மீக விசயத்தையும் பத்து வயதிற்க்குள் சொல்லிக்கொடுத்துவிடுங்கள். இளம் வயதில் கற்றுக்கொடுத்தால் சாமியார் ஆகிவிடுவார்கள் என்று நினைப்பது தவறான ஒன்று. நமது மதம் சந்நியாசிகளை உருவாக்க நினைப்பதில்லை. பயம்கொள்ளாமல் அனைத்து ஆன்மீகவிசயங்களையும் கற்றுக்கொடுத்துவிட்டால் போதும் அவர்களின் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

நான் சோதிட வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லும்பொழுது கூட அவர்களின் வீட்டுக் குழந்தைகளை கூப்பிட்டு பேசிவிட்டு வருவேன். அது எதற்கு என்றால் அவர்கள் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பிராத்தனை செய்துவிட்டு தான் வருவது பழக்கம். நான் சென்றவுடன் அந்த குழந்தைகள் கண்டிப்பாக கேட்பார்கள் யார் இவர். அப்பொழுது நீங்களே சொல்லிவிடுவீர்கள். ஆன்மீகத்தை  நோக்கி அவர்களும் வந்துவிடுவார்கள். ஆன்மீகத்தைப்பற்றி அவர்களும் தெரிந்துக்கொள்வார்கள்.

எதிர்கால தலைமுறை ஆன்மீகதலைமுறைகளாக மாற்ற வேண்டியது உங்களின் கையில் தான் இருக்கிறது. உங்களின் பக்கத்துவீட்டில் உள்ளவர்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

dreamwave said...

100th anubavam - lord murugan padam

rajeshsubbu said...

வணக்கம் சார். படம் அதுவாகவே அமைந்துவிட்டது.