Followers

Wednesday, July 6, 2016

புதன்


ணக்கம்!
          மனிதன் ஒவ்வொரு நாளாக எண்ணங்களை சேர்த்து வருகிறான். அப்படி சேர்த்த எண்ணங்கள் மனம் என்று அழைக்கபடுகிறது. மனம் உள்ளவன் மனிதன் என்று அழைக்கிறார்கள். மனத்திற்க்கு சோதிடத்தில் காரத்துவம் உடையவர் சந்திரன். புராணங்களி்ல் சந்திரனுக்கு மகனாக பிறந்தவர் புதன் என்று படித்தது உண்டு. 

அறிவாளி என்பவர் யார் நிறைய விசயத்தை சேர்த்து வைத்து அதனை வெளிக்கொண்டு வந்து செயலாற்றுவர். மனத்திற்க்கு காரகன் சந்திரனின் பையன் புதன். புதன்அறிவுக்கு காரகம் வகிக்கிறார். 

ஒன்பது கிரகங்களின் அருளும் மனிதனுக்கு தேவை தான் ஆனாலும் புதனின் அருள் அதிகம் இருந்தால் அவன் சிறந்து விளங்குவான். இன்றைய காலத்தில் நல்ல அறிவுள்ளவனை உலகம் மதிக்கிறது அல்லவா. அதற்கும் காரகம் வகிப்பவர் புதன் கிரகம் தான்.

புதன் கிரகம் நல்லவனோடு சேரும்பொழுது நல்ல பலனை தரும் அதாவது நல்ல கிரகத்தோடு சேரும்பொழுது நல்ல பலன் தரும். நல்ல புத்தி வேலை செய்யும். தீமையான கிரகத்தோடு சேரும்பொழுது தீயபலன்கள் அதிகம் தரும்.

புதன் கிரகம் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கும்பொழுது அதாவது பலன் குறையும்பொழுது அறிவும் மங்க செய்யும். ஒரு சில காலத்தில் வக்கிர நிலையிலும் அறிவு குறையும். அந்த காலத்தில் நாம் முக்கிய முடிவு எதுவும் எடுக்க கூடாது.

தற்சமயம் ஒன்றை சொல்லவேண்டும். அதாவது புதன் கிரகத்தின் பலன் அல்லது புதன் கிரகத்தின் வீட்டிற்க்கு முன்னால் ஒரு கிரகம் இருந்து அந்த கிரகம் புதனின் வீட்டிற்க்குள் நுழைய போகின்றது என்றால் ஒரு பெண் தாக்கப்பட்டு அது உலகம் முழுவதும் பரவலாகப்பேசப்படும்.

சோதிடத்தில் சொல்லுவார்கள் ஆண் பெண்ணிற்க்குள் வீணான சந்தேகம் ஏற்பட்டு அதனால் பிரச்சினையை கிளப்பிவிடுவது புதனின் வேலை என்பார்கள். காதலர்களுக்குள் பிரச்சினையை கிளப்பிவிடுவது புதனின் வேலை.

புதன் வீட்டிற்க்கு முன்னால் குரு கிரகம் இருந்த நேரத்தில் எல்லாம் ஒரு பெண் பாதிக்கப்பட்டு அது உலகளவில் பேசப்படும். டெல்லி சம்பவம் தற்பொழுது சென்னையில் நடந்த சம்பவத்தின் காலத்தை கொஞ்சம் எடுத்து பார்த்தால் உங்களுக்கு புரியும்.

இந்த காலகட்டத்தில் எல்லாம் குரு கிரகம் புதனின் வீட்டிற்க்குள் நுழைவதற்க்கு தயாராக இருந்த காலத்தில் நடந்துள்ளது. அதே நேரத்தில் ஐந்து மாதத்திற்க்கு முன்பே இப்படி எல்லாம் நடக்க ஆரம்பிக்கும் என்று ஒரு சில சாமியார்கள் என்னிடம் சொல்லிருக்கிறார்கள்.

சோதிடத்தில் சொல்லியுள்ளது காதலர்களுக்குள் வீண் சந்தேகத்தை கிளம்பும் என்று தான் சொல்லியுள்ளார்கள். நாம் இதனை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறது. செய்திதாளை நாம் எடுத்து பார்த்தால் தினமும் ஏதாவது ஒரு கொலை நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது ஆனால் ஒரு கொலை மிகவும் பரவலாக பேசப்படுவது இப்படிப்பட்ட காலமாக இருக்கிறது. சரி புதனை எழுதவந்து எதையோ நாம் எழுதவேண்டியதாகிவிட்டது. புதனைப்பற்றி அப்புறம் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

"புராணங்களி்ல் சந்திரனுக்கு மகனாக பிறந்தவர் சந்திரன் என்று படித்தது உண்டு. "
?????

rajeshsubbu said...

நன்றி நண்பரே மாற்றிவிட்டேன்.