Followers

Sunday, October 13, 2013

ஆன்மீக அனுபவங்கள் 121


வணக்கம் நண்பர்களே!
                    நமது உடல் எவ்வளவு எடை இருந்தாலும் அதனை ஒரு ஆத்மா உள்ளுக்குள் இருந்துககொண்டு சுமக்கின்றது. அந்த ஆத்மா உடலில் இருந்து வெளியில் வந்துவிட்டால் அந்த உடலை பல பேர் சுமந்துக்கொண்டு செல்லவேண்டியதாகிவிடுகிறது.

நமக்கு உயிர் இருக்கிறது நமது உடலை அது சுமக்கிறது. நாம் நாமே அனைத்து இடத்திற்க்கும் சென்று விடுகிறோம். நமக்கு மரணம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த உடலை ஒருவரால் தூக்கமுடிகிறதா இல்லையே பல பேர்கள் தூக்குகிறார்கள். பல பேர்கள் தூக்குவதற்க்கு காரணம் அந்த உடல் அவ்வளவு கனமாக இருப்பதால் மட்டுமே. இதுவரை அந்த உடலை உள்ளுக்குள் இருந்துக்கொண்டு தூக்கி சென்ற அந்த வஸ்து எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்.

அதனை நாம் உணரதொடங்கினாலே ஆன்மீகத்திற்க்கு முதற்படியாகிவிடும். கண்ணுக்கு தெரியாத அந்த வஸ்து மிகப்பெரிய உடலை தூக்குகிறது. அந்த வஸ்து போய்விட்டால் உடலை தூக்க பல பேர் தேவைப்படுகிறார்கள். நாம் கூட சொல்லுவோம் அல்லவா பிணம் கனம் கனக்கிறான் பார் என்று சொல்லுவோம் அல்லவா. அந்த வஸ்துவை நீங்கள் உணர்ந்தாலே போதும். 

அதனை உணர்ந்து என்ன செய்வது என்று கேட்கிறீர்களா. அதனை நீங்கள் உணர்ந்தால் நான் வேறு இந்த உடல் வேறு என்பதை நீங்கள் உணரமுடியும். அப்படி நீங்கள் உணரும்பொழுது மட்டுமே தன்நிலையில் ஞானம் பிறக்கிறது என்று அர்த்தம். அதுவரை நாம் இந்த உடலோடு பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த உடல் என்று அழிகின்றதோ அன்று அழியலாம்.

என்று ஆத்மாவை உணர்ந்துக்கொள்கிறீர்களோ அன்று நீங்கள் சாகாக்கலையை பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். நீங்கள் அனைவரும் போல சாகாமாட்டீர்கள்.இறப்பை வெல்வதே ஆன்மீகம். என்றும் வாழ்வீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: