Followers

Sunday, October 6, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 46



ணக்கம் ண்பர்களே!
                      ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு தசாவில் சூரிய புத்தியைப்பற்றி பார்க்கலாம்.

ராகு தசா சூரிய புத்தியின் காலம் 10 மாதம் 24 நாட்கள் ஆகும். பொதுவாக ராகு தசாவில் சூரிய புத்தியில் உடலில் சூடு அதிகரிக்கசெய்யும். உடலில் கட்டிகள் சூட்டால் கட்டிகள் தோன்றும். 

சூரியன் நல்ல நிலையில் இருக்கும்பொழுது இந்த புத்தி நடைபெற்றால் அரசாங்கம் வழியில் உங்களுக்கு பணவரவு மற்றும் மதிப்பு மரியாதை கிடைக்கும். அரசாங்கம் நடத்தும் லாட்டரி சீட்டை வாங்கினால் பரிசு விழும். பயணங்களில் வழியாக லாபம் ஏற்படும்.

சூரியன் ஏழாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது திருமணம் நடைபெறும். தந்தையின் வழியில் உள்ள உறவினர்களே திருமணத்திற்க்கு வரன் கொடுப்பார்கள். 

தந்தை உங்களுக்கு பொருள் உதவி செய்து உங்களுக்கு புதிய தொழில் ஆரம்பிக்க உதவுவார். அந்த தொழில் அரசாங்கத்தை சார்ந்து அமைவது போல் அமையும். அதாவது அரசாங்கம் உங்களுக்கு டெண்டர் விடும்.தொழில் வளர்ச்சி மிகவளர்ச்சியை கொடுத்துவிடும்.

ஊரில் உங்களுக்கு மதிப்பு மரியாதை ஏற்படுத்திக்கொடுப்பார். ஊரில் நடக்கும் விழாக்களில் உங்களை தலைமை தாங்க ஊர் மக்கள் கூப்பிடுவார்கள். மனிதனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் மரியாதையை கொடுத்துக்கொண்டு இருக்க வைப்பார்.

உங்களுக்கு ராகு தசா சூரியபுத்தி நல்லவிதமான முன்னேற்றத்தை கொடுத்துவிடும்.  

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: