Followers

Thursday, October 17, 2013

எமனுக்காக தானம்


வணக்கம் நண்பர்களே!
                    கலியுகத்தில் தானம் செய்யவேண்டும் அது மட்டுமே மிகஉயர்ந்த ஆன்மீகமாக சொல்லப்படுகிறது. இல்லாதவர்களுக்கு தானம் செய்யவேண்டும் அப்பொழுது மட்டுமே தானமாக அது இருக்கும்.

மரணத்தைப்பற்றி அஞ்சாதவர்கள் இருக்கமாட்டார்கள். உலகத்தில் பயத்தை அதிகம் தருவது எது என்றால் மரணமாக தான் இருக்கும். மனிதனாக பிறந்தவர்கள் என்றையாவது இறந்தே தீரவேண்டும் என்பதை உணர்ந்து தனக்கு தானே தானம் செய்துக்கொண்டு வரவேண்டும். நீங்கள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தாலும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் செய்துக்கொண்டே வரவேண்டும்.

இப்படி தானம் செய்துவருவது இப்பிறவியில் பயனை எதிர்பார்க்காமல் செய்துக்கொண்டு வருவது நல்லது. போய்ச்சேரும் இடத்திற்க்காக இதனை செய்ய வேண்டும். நம்மை கொல்ல எமன் தான் வருகிறார். அவரிடம் இருந்து எந்தவித தொந்தரவும் நமக்கு இல்லாமல் நாம் போய் சேரவேண்டும் நம்மை கொண்டுசெல்வதற்க்கு எமதூதர்கள் வருவார்கள். அவர்கள் கோரமாக பார்ப்பதற்க்கு அருவருத்த முறையில் இருப்பார்கள். அவர்கள் சாந்தமாக நம்மை நெருங்கி அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்.

இது எல்லாம் நமக்கு நடக்க வேண்டும் என்றால் கலியுகத்தில் நாம் தானம் செய்ய வேண்டும். எந்த மாதிரியான பொருளை நாம் தானம் செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். அரிசி எள் வெற்றிலை பாக்கு புஸ்பம் இவற்றை தானம் செய்யவேண்டும்.

இதனை தானம் செய்வது ஒரு சனிக்கிழமையில் செய்யவேண்டும். சனிக்கிழமை மட்டுமே செய்வது நல்லது. எதற்க்காக தானம் செய்கின்றேன் என்று சொல்லாமல் செய்துவருவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Anonymous said...

ஆம். தான தர்மமும் பகவத் நாம ஸ்மரணமுமே கலியுகத் தர்மங்களாக இறைவனை அடையும் வழிகளாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. நல்லதோர் பகிர்விற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் வருகைக்கு நன்றி

rajeshsubbu said...
This comment has been removed by the author.