Followers

Thursday, October 17, 2013

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே !
                    ஒவ்வொரு மனிதனையும் கடவுள் தனித்தன்மையோடு படைத்து இருப்பதுபோல் ஒவ்வொருவருக்கும் ஜாதகத்தையும் தனித்தன்மையோடு தான் இருக்கின்றது. நாம் என்ன தான் சோதிடவிதிகளை அனைத்தும் கற்று பலன் கூறினாலும் ஒரு சில ஜாதகங்கள்  தவறாக பலனை சொல்லிவிடுவோம். 

பொதுவாக ஒரு விதியை சோதிடர்கள் சொல்லுவார்கள். லக்கினாதிபதி கெடுதல் அடையகூடாது என்பார்கள். லக்கினாதிபதி கெடுதல் அடைந்தால் அவரால் எதுவும் செய்யமுடியாது. அவர்கள் பல கஷ்டத்தி்ற்க்கு ஆட்படுவார்கள் என்று சொல்லுவோம். 

அனுபவத்தில் பல பேர்களுக்கு லக்கினாதிபதி கெட்டும் அருமையான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள். லக்கினாதிபதி எட்டில் அமர்ந்துவிட்டால் வாழ்க்கை போராட்டம் என்று சொல்லுவார்கள். அவன் எந்த வேலைக்கும் செல்லமாட்டார். அவன் ஜீவனம் நடத்தவே பிரச்சினையாக இருக்கும் என்று சொல்லுவார்கள். நான் பார்த்த பல பேர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி எட்டிற்க்கு சென்று கெடுதல் அடைந்தாலும் அந்த ஜாதகர்கள் நல்ல வாழ்க்கையை அனுபவித்து வாழ்க்கின்றனர்.

ஒரு சிலர்க்கு பிறரின் சொத்துக்கள் மற்றும் பணம் வந்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் அதனை வைத்து நன்றாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு ஜாதகத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன அனைத்தையும் நாம் ஆராய்ந்து சொல்லுவதற்க்கு நேரம் இல்லாத காரணத்தால் செய்யமுடிவதில்லை.

எப்படி ஜாதகம் கெட்டாலும் ஏதோ ஒன்று அவர்களை காப்பாற்றிக்கொண்டு இருக்கும். அது எந்த கிரகம் என்று பார்த்து அந்த வழியில் நாம் செல்லும்பொழுது கூடுதல் நல்பலனை நாம் அனுபவிக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

sir, how to know that which planet is doing favour for us. For eg., guru at lagnam, saniswaran at thulam, budhan at 9th position. who will do more benefits. Means planet at which position will do more benefits for the native.

rajeshsubbu said...

வணக்கம் நீங்களும் விடாமல் கேள்விக்கேட்டுக்கொண்டே இருக்கின்றீர்கள். உங்களின் கேள்விக்கு அனைத்திற்க்கும் பதிவிலேயே பதிலை தந்துவிடுகிறேன். நன்றி