Followers

Tuesday, October 15, 2013

பூர்வ புண்ணியம் 54


வணக்கம் நண்பர்களே !
                   பூர்வபுண்ணியத்தை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது. மறுபடியும் ஒரு நிகழ்வை பூர்வபுண்ணியத்தோடு பார்க்கலாம்.

ஒருவருக்கும் வேறு ஒருவருக்கும் திடீர் ஏற்படும் சண்டை கொலையில் போய் முடிவடைந்துவிடும். கொலை முடிந்தபிறகு கொலையை செய்தவர் தண்டனை அனுபவிப்பார். அவரிடம் கேட்டால் என்ன நடந்து என்றே தெரியவில்லை. நான் எப்படி கொலை செய்தேன் என்று கூட தெரியவில்லை நான் இப்படி செய்தேன் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது என்று சொல்லி மனம் வருந்துவார். அவர் தண்டனையை அனுபவிப்பார்.

இது திடிர் என்று ஏற்பட்ட கோபத்தால் இது நடந்திருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. முன்ஜென்மபகையால் வந்த வினை இது. முன்ஜென்மத்தில் இருந்த பகை எல்லாம் இந்த கொலை நடந்த நேரத்தில் வெளிப்பட்டுவிடும். அப்பொழுது அதன் கோரம் தாக்குதலாக மாறி ஆத்மா பகையை தீர்த்துக்கொள்கிறது. சட்டத்திற்க்கு இது திடிர் கோபத்தால் நடந்து என்று சொல்லலாம் ஆனால் உண்மை முன்ஜென்மபகை மட்டுமே.

முன்ஜென்மத்தில் என்ன நடந்தோ அது அனைத்தையும் ஒரு ஹர்ட்டிஸ்க்கில் சேமித்து வைப்பதுபோல் நமது ஆத்மாவில் சேமித்து நிற்கிறது. அது சமயம் பார்த்து வெளிப்படுத்துகிறது. இதனை வெளிப்படுத்துவதற்க்கும் கடவுள் துணை புரிகிறார் என்றே தோன்றுகிறது. இவன் கொலை செய்வதால் இருவருக்கும் உள்ள பகை முற்று பெறுகிறது. இறுதியில் கடவுளோடு கலந்துவிடுகிறார்கள்.

தன்னுடைய ஆத்மாவில் என்றும் குரோதத்தை வளர்க்ககூடாது என்று சொல்லுவார்கள். அது ஆத்மாவிற்க்கு சென்றால் அதனை செய்யாமல் விடாது.

தொடர்ந்து பூர்வபுண்ணியத்தை பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

redfort said...

How finding our purva punniyam from our birth chart