Followers

Friday, October 25, 2013

காலபைரவர்


வணக்கம் நண்பர்களே!
                    நான் எங்கு சென்றாலும் என்னை வந்து சந்திக்கும் நண்பர்கள் ஆன்மீகத்தைப்பற்றி கேட்காமல் இருக்கமாட்டார்கள். திருப்பூரில் நமது நண்பர்கள் சந்தித்தபொழுது காலபைரவரைப்பற்றி கேட்டார்கள். அதனைப்பற்றி பல நண்பர்கள் இன்று மெயில் அனுப்பி கேட்டார்கள். பைரவரைப்பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். மறுபடியும் கேட்கிறார்கள். சொல்லுகிறேன் படித்து பாருங்கள்.

பைரவரை கோவிலில் சென்று வழிப்படுவது மட்டுமே சிறப்பு. வீட்டில் வைத்து வழிப்படுவது தவறான ஒன்று. நீங்கள் கோவில் சென்று வழிப்பட்டாலும் பிரத்தானமாக இதனை வழிபாடு செய்ய வேண்டியதில்லை. வடக்கில் இருந்து வந்த கபால வழிபாடு தான் காலபைரவ வழிபாடு. 

ஒரு சிலர் பைரவ மந்திரத்தை அல்லது பூஜையை செய்கின்றனர். இது எல்லாம் உங்களுக்கு வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன். ஒருவர் பைரவ வழிப்பாடு செய்யும்பொழுது அவர்களின் குடும்பத்தில் உள்ள தலைவரை பைரவர் காவு வாங்கிவிடுவார். குடும்பத்தில் உள்ள நபர்களை தனியாக பிரிப்பதில் பைரவரின் செயல் அதிகமாக இருக்கும். நன்றாக இருக்கும் குடும்பத்தை ஏன் நீங்களே பிரிக்க உதவவேண்டும். தலைவரை காவு வாங்கிவிட்டால் குடும்பம் சிக்கலில் மாட்டிக்கொள்ளும். அப்புறம் என்ன நடக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லதேவையில்லை.

இதனை பலபேர்களிடம் நான் சொல்லிருந்தாலும் நீங்கள் கேட்பதில்லை. நீங்கள் நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக செய்தால் உங்களுக்கு பிரச்சினை வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பலர் பைரவமந்திரத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு உள்ளனர். அடுத்தவர்களைப்பற்றி குறைச்சொல்ல கூடாது ஆனால் மக்களுக்கு ஒரு அறிவுரை மாதிரி நாம் சொல்லிவிட்டால் அவர்கள் விழிப்போடு இருப்பார்கள் என்பதால் இதனை சொல்லுகிறேன். 

நான் ஏற்கனவே ஒரு மந்திரத்தைப்பற்றி அது தவறான மந்திரம் என்று சொல்லிருந்தேன். அந்த மந்திரத்தை அவர்களே இப்பொழுது விட்டுவிட்டனர். அதனை செய்து நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என்று சொன்னது எல்லாம் கற்பனை என்பது உங்களுக்கு இப்பொழுது தெரிந்துவிட்டது. அதனை போல் பைரவரையும் தவறு என்று சொல்லுகிறேன். காலம் கூடியவிரைவில் அதற்கு பதில் சொல்லும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: